MAG Resource Revolution Pvt.Ltd நிறுவனத்தைத் திறந்து வைத்து கழகத் தலைவர் வாழ்த்துரை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரவிந்த் முருகன் – தேவகிருபா இருவரும் காதல் மற்றும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்!
இன்று தொழில்நுட்பத்தில் உச்சத்தை அடைந்திருக்கிறார்கள்!

கடலூர். ஆக. 30- MAG Resource Revolution Pvt.Ltd நிறுவனத்தை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து, அதன் உரிமையாளர்களான அரவிந்த் முருகன் – தேவகிருபா ஆகியோரை வாழ்த்திப் பேசினார். அப்போது, “இருவரும் காதல் மற்றும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்” என்றும், “இன்று தொழில்நுட்பத்தில் உச்சத்தை அடைந்திருக்கிறார்கள். அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன்” என்றும் வாழ்த்தினார்.

திராவிடர் கழகம்

கடலூர் செல்லாங்குப்பம், கோவிந்தசாமி நகரில், ரோட்டரி கிளப் கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள, MAG Resource Revolution Pvt Ltd, நிறுவனத்தை, 29.08.2026 சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். இந்நிறுவனம், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் சகோதரர் கடலூர் கி.தண்டபாணி அவர்களின் பேரன் அரவிந்த் முருகன் – தேவ கிருபா இணையருக்குரியது ஆகும். இந்நிறுவனத்தின் ஒரு பகுதியை MAG EEE (AITUAR) புதுச்சேரி பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் பி.செந்தில்குமார் தொடங்கி வைத்து உரையாற்றினார். முன்னதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவ கிருபா அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். இயக்குனர்கள் அரவிந்த் முருகன், பெரியசாமி, கழகப் பொதுச் செயலாளர்கள் வீ .அன்புராஜ், முனைவர் துரை.சந்திரசேகரன், கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்டக் காப்பாளர் ஆர்.பி.எஸ். பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் எழிலேந்தி, தென் சிவகுமார், புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, இள.புகழேந்தி, பண்ருட்டி கோ.புத்தன், டிஜிட்டல் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவகிருபா மற்றும் இயக்குனர் அரவிந்த் முருகன் ஆகியோர் கழகத் தலைவருக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர். அத்துடன், “பெரியார் உலகம்” நன்கொடையாக ரூபாய் 25,000/- வழங்கினர்.

திராவிடர் கழகம்

நிறைவாக, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், நிறுவனத்தின் உரிமையா ளர்களை வாழ்த்தி உரையாற்றினார். அவர் தமது உரையில், “குருதி குடும்பம்; கொள்கைக் குடும்பம்; தொழில் குடும்பம் மூன்று குடும்பங்களும் இங்கே ஒன்றாக இருக்கின்றன. அரவிந்த் முருகன், தேவகிருபா இருவரும் பெரும் ஆற்றலுடன் இதைச் செய்திருக்கிறார்கள். நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம். இருவரும் காதல் மற்றும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். இன்றைக்கு தொழில்நுட்பத்தின் உச்சத்தை அவர்கள் அடைந்திருக்கிறார்கள்” என்று நெஞ்சார வாழ்த்தினார். தொடர்ந்து பேசிய அவர், 80 ஆண்டுகளுக்கு முன்பு, தந்தை பெரியார் ஒரு திருமணத்தில் பேசியதை, அறிஞர் அண்ணா குறிப்பு எடுத்து வைத்துக்கொண்டு, அதை பெரியாரிடமே காட்டி, இதை “திராவிட நாடு” இதழில், நான் வெளியிட்டு கொள்ளட்டுமா? உங்கள் அனுமதி தேவை!” என்று கேட்டபோது, பெரியார், ‘தாராளமாக போட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொன்னதையும், அந்த புத்தகத்தில், “இனி வரும் உலகம்” எப்படி இருக்கும் என்று பெரியார் பேசியிருந்தது, இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருப்பதையும், இவற்றையெல்லாம் பெரியார் அன்றைக்கே பேசியிருப்பதையும் சுட்டிக்காட்டி, இதெல்லாம் திராவிடர் இயக்கத்தால் வந்தது. தந்தை பெரியாரால் வந்தது. அந்த வகையில் அரவிந்த் முருகன் – தேவ கிருபா இருவரும், ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்று, தொழில்நுட்பத்தில் சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மேலும் சிறக்க வேண்டும்; வளர பெரிய அளவில் வளர வேண்டும்” என்று வாழ்த்தி, தனது உரையை நிறைவு செய்தார்.

திராவிடர் கழகம்

தொடர்ந்து, குருதிக் குடும்பத்தினர் கழகத் தலைவருக்கு ஒன்றன்பின் ஒன்றாக பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். குடும்பம் குடும்பமாக கழகத் தலைவருடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முருகன், சாந்தினி, செல்வமணி, தேசிங்கு ராஜன், பெரியார் செல்வம், ஜெயபாலன், தேன்மொழி, சந்துருகுமார், பெரியசாமி, சதீஷ், யுவராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் சரத் மற்றும் இயக்கத் தோழர்களும் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *