இந்தியாவில் மாநிலங்களில் ஜனநாயகம் ஏற்பட்ட பிறகு எந்த மாநிலத்தில் எப்போது அமைதி, பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு யோக்கியமாய் நடந்து வந்தது; வருகிறது என்று சொல்ல முடியும்? டில்லியில் காமராசர் கொலை முயற்சி ஜனநாயக ஆட்சி முறையா? மற்றும் மாகாணங்கள் தோறும் நடந்து வந்த, வருகிற பலாத்கார, காலித்தனமான கிளர்ச்சிகள் உண்மையான ஜனநாயக ஆட்சியின் இலட்சணத்தைக் கொண்டவையா? ஆகவே இதற்கு மேல் மக்கள் இந்திய ஜனநாயகத்தைப் பரிட்சை பார்க்க நேரத்தைச் செலவழித்து நாட்டையும், மக்களையும் பாழாக்க வேண்டுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2058)
Leave a Comment
