சிவகங்கை அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 12 கிராம விவசாயிகள் எதிர்ப்பு

இணையவழி கையெழுத்து இயக்கம்

சிவகங்கை. ஆக. 29– சிவகங்கை அருகே 1,600 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக் கும் திட்டத்துக்கு 12 கிராம விவசாயிகள் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், 10,000 பேரை திரட்டி பேராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் வேம்பங்குடி பகுதியிலும், காளையார்கோவில் அருகே பால்குளம் பகுதியிலும் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, பால்குளம் பகுதியில் 100 ஏக்கர் அரசு நிலம் உட்பட மொத்தம் 550 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

அதேபோல், வேம் பங்குடி சிப்காட் தொழிற் பேட்டைக்காக வேம்பங்குடி, மாடக்கோட்டை, சுந்தர நடப்பு, கீழக்கண்டனி, ஆலங்குளம், உசிலங்குளம், உடையநாதபுரம், கடுக்காப்பள்ளம், உச்சப் புளி, வெள்ளஞ்சி, காட்டு நெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கர் அரசு நிலம் உட்பட மொத்தம் 1,600 ஏக்கரும் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே பால் குளம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பால்குளம், புதுக்குடியிருப்பு, பாப்பான் கண்மாய், மந்திக் கண்மாய் உள்ளிட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சிய ரிடம் முறையிட்டனர்.

இந்நிலையில், வேம்பங்குடி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராக 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், அர சியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது.

இதில், சிவகங்கை நகராட்சித் தலைவர் துரை ஆனந்த், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜெய ராமன், அதிமுக ஒன்றியச் செயலாளர் செல்லமணி, மார்க்சிஸ்ட் கம்யூ. விஸ்வநாதன், இந்திய கம்யூ. மருது, தமிழக வாழ்வுரிமை கட்சி நடிகர் குட்டிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்கு பிறகு, நகராட்சித் தலைவர் சி.எம். துரை ஆனந்த் கூறும்போது, “12 கிராமங்களில் 2,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மொத்தம் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதிகளின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. விளைநிலங்களை கையகப்படுத்தினால், கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

இதனால், நிலம் கையகப்படுத்தும் பணியை கைவிட வேண்டும். இது தொடர்பாக, முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியரின் முறையிடுவது, அங்கு நடவடிக்கை இல்லாவிட்டால் 10,000 பேரை திரட்டி போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம்” என்று நகராட்சித் தலைவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *