தி.மு.க.வில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் 110 மாவட்டங்கள் உருவாக்கம்! தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 29– திமுக அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்களின் எண்ணிக் கையை 110-ஆக அதிகரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “திமுக என்ற பேரியக்கம், கொள்கை, அமைப்புமுறை, செயல்பாடுகள, உடன்பிறப்புகள் என்ற நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் இயக்கம்.

இந்நான்கையும் காலங்கள் தோறும் நாம் புதுப்பித்தும், மேன் மைப்படுத்தியும், கூர்தீட்டியும், செழுமைப்படுத்தியும் வந்திருக் கிறோம். இவை அனைத்தும் கோடிக் கணக்கான உடன் பிறப்புகளின் எண்ணங்கள் அடிப்படையில்தான் அமைந்துள்ளன.

அந்த அடிப்படையில், கடந்த 22.8.2026 அன்று நடைபெற்ற தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிகமுக்கியமான முடிவுகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்.

திமுக தொடங்கப்பட்ட நாள் முதல், இதுவரையில் 15 முறை தி.மு.க. அமைப்புரீதியாகத் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக 16-ஆவது தி.மு.க. அமைப்புத் தேர்தலை நடத்திடவும், பல்வேறு அமைப்புரீதியாக நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவும் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதில் மிக முக்கியமானது மாவட்டக் கழகங்கள் குறித்தத் தீர்மா னமாகும். அதில், தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக் கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்து, எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் கழகத் தலைவரான எனக்கு வழங்கப் பட்டது.

இதனையடுத்து, கழக மறு சீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், கழக முன்னணியினருடன் கலந்தா லோசித்து, தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளை 110 மாவட்டங்களாகப் பகுத்து அறிவிக்கிறேன். அதில், அதிகமான மக்கள் தொகை இருப்பதன் காரணமாகச் சோழிங் கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் தற்போதுள்ள மாவட்ட தி.மு.க. செயலாளர்கள், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, மேற்குறிப்பிடப்பட்டுள்ள கழக மாவட்டங்களின் அடிப்படையில், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாள்களுக்குள் வழங்கிட வேண்டும் என்றும், தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், கழக மறுசீரமைப்புக்குழு மூலம் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *