உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மோடி மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மாநில அதிகாரிகளின் நிர்வாகத்தின் சிறுவர், சிறுமிகளைக் காவல் துறையினர் கைது செய்து காவலில் வைத்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 வயதிற்கு உட்பட்டவர் களை எந்தச் சட்டத்தின் அடிப் படையில் காவலில் வைப் பதற்காக தெருக்களில் இழுத்து வருகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறுவர்களைக் கண்டு மோடியும் அவரது அரசாங்கமும் இந்த அளவிற்கு பயப்படுகிறார்கள் என்றால், இந்நாட்டின் நிலைமை என்னவாக மாறியிருக்கிறது என்பதை நினைக்க வேண்டியுள்ளது.
இந்த நிகழ்வால் அந்தக் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் சுமக்கப் போகும் மன உளைச்சலையும், அவனது குடும்பத்தினரும் நண்பர்களும் சந்திக்கும் வேதனையையும் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

இதில் மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட எந்தவொரு காவல் அதிகாரியும், “சிறுவர்களை இப்படி தெருவில் இழுத்துச் செல்வது சரியா?” என்ற அடிப்படை கேள்வியைக் கூட தங்களுக்குள் கேட்டுக் கொள்ளவில்லை என்பதே ஆகும்.
ஜனநாயகத்தில் வெளிப்படும் எதிர்ப்புக் குரல்களை மோடி மற்றும் அமித்ஷா இருவரும் கையாளும் விதம் இதுதானா என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பீகார் மாநிலம் பாட்னாவில் பீகார் அரசுப் பணிக்கான தேர்வு முறைகேடு மற்றும் குற்றவாளியைக் கைதுசெய்வது தொடர்பாக நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, 6 வயது சிறுவன் ஒருவர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினார். அதே போல் 24 ஆம் தேதி லக்னோவில் நடந்த மாணவர் போராட்டத்தின் போது போராட்டத்தில் தனது சகோதரியுடன் கலந்துகொண்ட 6 வயது சிறுமியை காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் வலுக்கட்டாயமாக அவரை தூக்கிச்சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றுகிறார்.
மற்றும் இதே சத்தீஸ்கரின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வீடு தேடி கைதுசெய்த காவல்துறையினர் வீட்டில் இருந்து சிறுமியையும் கைதுசெய்து அழைத்துச்சென்றது. இவ்வாறெல்லாம் செய்வது எவ்விதத்தில் சரியானது?
இதுவரை, சிறு பிள்ளைகள் பங்கேற்காத, போராட்டம் என்றால் என்னவென்றே அறியாமல் வளர்ந்தவர்களே போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இச்சிறுவர்களும், சிறுமிகளும் ‘போராட்டம்’ என்று சமூகத்துக்காக தங்கள் நிலைப்பாட்டைக் காட்டும்போது, அவர்களின் வயதையோ, குழந்தைப்பாடு நிலையையோ சற்றும் பொருட்படுத்தாமல் அதிகாரிகளும், அரசாங்கமும் இப்படி (கைது) செய்வது வேதனைக்குரியதாகும். வெட்கப்படக் கூடியதாகும்!
