செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்க வழங்கப்பட்ட பணி ஆணை ரத்து

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 28- செம்மஞ் சேரியில் சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைக்க வழங்கப்பட்ட பணி ஆணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறைக்கு அதிக அளவில் முக்கியத் துவம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உலகத் தரத்திலான மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி எனும் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று கடந்த 2023ஆம் ஆண்டு மேனாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்த விளையாட்டு நகரத்தை அமைப்பதற்காக செம்மஞ்சேரி, வண்டலூர், குண்டம்பாக்கம் உள்ளிட்ட இடங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியில் செம்மஞ்சேரி தேர்ந் தெடுக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதாலும், சர்வதேச வீரர்கள் வந்து செல்ல வசதியாகவும் இருக்கும் என்பதால் இங்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 112 ஏக்கர் பரப்பளவில் ரூ.206 கோடி மதிப்பில் விளையாட்டு நகரம் அமைப்பதற்காக ‘ஆர்பிபி’ (RPB) என்ற நிறுவனத்திற்குப் பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்க முன்னர் வழங்கப்பட்டிருந்த அந்தப் பணி ஆணையைத் தமிழ்நாடு அரசு தற்போது ரத்து செய்துள்ளது. இதுதொடர்பாகச் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அரசு தரப்பிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *