பி.எம். சிறீ திட்டத்தை அனுமதித்தால் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் : வைகோ எச்சரிக்கை!

1 Min Read

மதுரை, மே 22 மதுரையில் நடைபெற்ற மதிமுக தென்மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியின் உட்கட்சித் தேர்தல் மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

மொழிப்போர்

தமிழ்நாட்டில் ‘பி.எம்.சிறீ திட்டத்தை எப்படியாவது திணித்துவிட வேண்டும் என்று ஒன்றிய அரசு முயற்சித்து வருவதாகக் குற்றம் சாட்டிய வைகோ, “எக்காரணம் கொண்டும் இத்திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தத் திட்டத்தை நாம் எதிர்த்தே ஆக வேண்டும். ஒருவேளை ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்தால், தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு மொழிப்போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகும்,”

சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழா குறித்துப் பேசிய அவர் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ திணிக்கப்படுகிறது. பதவிப் பிரமாண ஏற்பாடுகளை ஆளுநரே செய்வதால் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எது எப்படி இருந்தாலும், தமிழ்நாடு அரசு விழாக்களில் எப்போதும் ‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு’ மட்டுமே முன்னுரிமை அளிக் கப்பட வேண்டும்.

கூட்டாட்சித் தத்துவத்திற்கு எந்தவித இடையூறும் வராமல், மாநிலங்களுக்கான அதிக அதிகாரங்களைப் பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் அணுகுமுறை அமைய வேண்டும்.

இறுதியாக, “மதச்சார்பின்மையைப் பாதுகாக்கும் கொள்கையில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருந்த்து போல் இந்த அரசும் இருக்கவேண்டும்’’.

இவ்வாறு வைகோ கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *