மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு இணையர் உஷாராணி மறைவுற்றார் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடை அளிப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக.27–  மூத்த பத்திரிகையாளர், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (MUJ) மேனாள் பொதுச் செயலாளர், ‘தீக்கதிர்’ நாளிதழின் மேனாள் செய்தி ஆசிரியர், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினருமான மயிலை பாலுவின் (எஸ்.எம்.பாலசுப்பிரமணியம்) இணையர் ஆர்.உஷாராணி (வயது 72) அவர்கள் உடல் நலக்குறைவால் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 25.8.2026 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைவுத் தகவல் அறிந்ததும் சென்னை பத்திரிகையாளர் சங்கம், சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆகியவற்றின் மேனாள், இந்நாள் நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளானப் பத்திரிகையாளர்கள் நேரில் சென்று அம்மையாரின் உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தி, மயிலை பாலு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

உடற்கொடை

மறைவுற்ற அம்மையார் ஆர்.உஷாராணி அவர்களின் உடல் சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று (27.8.2026) காலை முறையாக உடற்கொடை வழங்கப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *