பி.எட். சேர்க்கை: செப். 4 இறுதி நாள்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக.27- தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் (டிஎன்டிஇயு) இணைவு பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., பி.எட். (சிறப்பு) பட்ட வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்க செப். 4 இறுதி நாள் என அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளா் க.ராஜசேகா் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிவிப்பு வருமாறு: தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளில் 2026 – 2027 கல்வியாண்டில் பி.எட்./பி.எட். (சிறப்பு கல்வி) இளநிலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இணையம் வழியாக கடந்த ஆக. 19 -ஆம் தேதி தொடங்கியது. இதற்கான கடைசி நாள் செப். 4 ஆம் தேதி.

விண்ணப்பச் சரிபார்ப்பிற்கு பின்னா், கல்லூரி முதல்வா்கள் மாணவா்கள் எண்ணிக் கைக்கு ஏற்ப உரிய கட்டணத்தை இணை யத்தில் செலுத்தி சோ்க்கை விவரங்களை பல்கலைக்கழக இணை யத்தில் பதிவேற்றம் செய்து இணைவு ஆணை பெறப்பட வேண்டும்.

மேலும் பி.எட். பட்ட வகுப்பில் சோ்க்கப்பட்ட முதலாமாண்டு மாணவா்களுக்கு வரும் செப். 2- ஆம் தேதி முதல் வகுப்புகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *