துல்லியமான தரவுகள் இல்லாமல் சமூகநீதிக் கொள்கைகளைச் செயல்படுத்த முடியாது ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் தற்போதைய முறை ஏற்கத்தக்கதல்ல மாற்று முறை கொண்டுவர பிரதமருக்கு ராகுல்காந்தி, கார்கே கூட்டாகக் கடிதம்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக.26– ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் தற்போதைய முறை ஏற்கத்தக்கதல்ல, எனவே மாற்று முறை கொண்டுவர வேண்டும் என பிரதமருக்கு ராகுல்காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர்.

அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் துல்லியமான தரவுகள் இல்லாமல் சமூகநீதிக் கொள்கைகளை செயல்படுத்த முடியாது. பல்வேறு ஜாதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் சமூக-பொருளாதார நிலை குறித்த துல்லியமான மதிப்பு, சரியான சாதி கணக்கெடுப்பின் மூலம் மட்டுமே சாத்தியமாகும். உங்கள் அரசு, மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதித்தகவல்களை பதிவு செய்ய, தவறான வழி காட்டுதலான திறந்தநிலைக் கேள்வி முறையை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அணுகுமுறையில், ஒவ்வொரு தனிநபரும் குறிப்பிடும் ஜாதிப் பெயரே பதிவு செய்யப்படும்.

இந்தியாவில், ஒரே ஜாதி வெவ்வேறு பிராந்தியங்களில் வெவ்வேறு பெயர்கள், உட்பிரிவுகள் மற்றும் மொழிகளால் அறியப்படுகிறது. எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட்டால், ஒரே ஜாதி ஆயிரக்கணக்கான பெயர்களாக பிரிக் கப்படும். இதனால் நாட்டில் லட்சக் கணக்கான ஜாதிகள் உருவாகி, ஜாதி கணக்கெடுப்பில் இருந்து பெறப் பட்ட முழுத் தரவுகளும் பயனற்றதாகி விடும்.

ஏற்கவில்லை

ஒரு சமூகத்தின் சரியான எண் ணிக்கை பதிவு செய்யப்படாதபோது, அதன் நிலை தவறாக மதிப்பிடப்படும். இது பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய மற்றும் பிற நலிவடைந்த சமூகங்களை பாதிக்கும்.

மேலும், கல்வி, வேலைவாய்ப்பு, திட்டங்கள் மற்றும் சமூகநீதி தொடர் பான முடிவுகளும் பாதிக்கப் படும். மிக முக்கியமாக, மக்கள்தொகை கணக்கெடுப்பில் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ என்ற சொல் சேர்க்கப்படாததால், இது இந்தியாவில் உள்ள இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கையை வெளிப்படுத்தாது.

இதற்கு ஏற்ெகனவே ஓர் எளிய தீர்வு உள்ளது. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர் பட்டியல் மற்றும் இந்திய மானுடவியல் ஆய்வு போன்ற ஏற்ெகனவே உள்ள அரசுப் பட்டியல்களின் அடிப்படையில் இந்த பட்டியலை எளிதாக உருவாக்க முடியும். தெலங்கானா மற்றும் பிகார் ஜாதி கணக்கெடுப்புகளிலும் இதே முறை பயன்படுத்தப்பட்டது. தற்போதைய ஜாதி கணக்கெடுப்பு முறையை நாங்கள் ஏற்கவில்லை.

புதிய கேள்வித்தாள்

எனவே அரசு அதனைரத்து செய்துவிட்டு, அரசியல் கட்சிகள், வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு ஜாதி மற்றும் சமூகத்திற்கும் துல்லியமான எண்கள் வெளிப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் ஒரு புதிய கேள்வித்தாவை உருவாக்கவேண்டும். இதன் மூலம் ஜாதி கணக்கெடுப்பு துல்லியமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதிசெய்ய முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

பிகார், தெலங்கானாவின் மாதிரி கேள்வித் தாளையும் அக்கடிதமுடன் இணைத்து உள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *