நான்கு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

வாசிங்டன், ஆக.26– ஈரானில் இருந்து பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருள்களை இறக்குமதி செய்யும் 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.

ஈரானின் அனைத்து வருவாய் ஆதாரங்களையும் தடை செய்யும் நோக்கில் ‘ஆபரேஷன் பொருளாதார புறக்கணிப்பு’ என்ற நடவடிக்கையை அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசென்ட் 24.8.2026 அன்று அறிவித்தார். இதன்கீழ் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது.

அந்தப் பட்டியலில் போர்ட்ஈஸ் பார்ட்னா்ஸ் நிறுவனம் மற்றும் அதன் கூட்டாளிகள் இந்திரிஸ்மியா அஷ்ரஃப்மியா ஷேக், ஹரீஷ் ராமசந்திரா ரங்கி, சதாசிவா ஓவா்சீஸ் நிறுவனம், பிபி சாஃப்டெக் மற்றும் அதன் இயக்குநா் பிரசாந்த் கா்க், பிரக்ருதீஸ் உள்கட்டமைப்பு நிறுவனம் இடம்பெற்றது.

இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஈரானில் இருந்து பெட்ரோகெமிக்கல் கொள்முதல், இறக்குமதி மற்றும் விற்பனை செய்ததற்காக 4 இந்திய நிறுவனங்களுக்கும், இந்திரிஸ்மியா அஷ்ரஃப்மியா ஷேக் ஹரீஷ், ராமசந்திரா ரங்கி மற்றும் பிரசாந்த் கா்க் ஆகிய இந்தியா்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஈரான் மீது இதுவரை இல்லாத வகையில் பொருளாதாரத் தடையை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்தது. மேலும், ஈரானுடன் பிற நாடுகள் வா்த்தகத்தில் ஈடுபடக் கூடாது எனவும் அமெரிக்கா எச்சரித்தது. இதனால் வரலாற்றில் இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் ரியால் மதிப்பு 20.2 லட்சமாக சரிந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *