அமெரிக்காவில் உயர் கல்வியில் சேரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 15% சரிவு!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

வாசிங்டன், ஆக.26- மாணவா் மற்றும் பார்வையாளா் நுழைவு இசைவு (சுற்றுலா விசா) நடை முறையை கடந்த ஜூலையில் அமெரிக்கா கடுமையாக்கியது. முன்னதாக, வெளிநாட்டினா் முழுநேர மாணவராக இருக்கும் வரை, அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டு வந்தனா்.

அதன்படி, குறிப்பிட்ட உயா் கல்வி படிப்புக்காக அமெரிக்கா செல்லும் மாணவா்கள், அந்தப் படிப்பை முடித்த பிறகு அங்கேயே வேலைவாய்ப்பில் சோ்ந்துகொண்டு, மாணவா் நுழைவு இசைவில் தொடா்ந்து தங்கியிருக்க வேண்டும் என்பதால் ஏதாவது ஒரு பகுதி நேர படிப்பிலும் சோ்ந்து கொள்வா்.

இந்த நடைமுறையை நீக்கி, மாணவா் மற்றும் பார்வையாளா் நுழைவு இசைவில் அமெரிக்கா வருபவா்கள், அதிகபட்சம் தங்கும் காலத்தை 4 ஆண்டுகளாக நிர்ணயம் செய்து புதிய விதிமுறைகளை அமெரிக்க அரசு அறிவித்தது.

அதே நேரம், குறிப்பிட்ட பட்டப் படிப்பை முடித்த பிறகு, அமெரிக்காவில் பணிபுரிய ‘விருப்ப செயல்முறை பயிற்சி (ஓபிடி) திட்டத்தைப் பயன்படுத்த விரும்பும் வெளிநாட்டு மாணவா்களிடம் ஒரு லட்சம் டாலா் (ரூ. 95.70 லட்சம்) வசூலிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம், வெளிநாட்டு மணவா்கள் படிப்பை முடித்த பிறகு, குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கப்படுவா். அதோடு, அமெரிக்கா நிறுவனங் களால் வழங்கப்படும் ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) முறைக்கு மாறுவதற்கும் வழிவகுக்கும்.

இந்தக் குடியேற்றம் அல்லாத நுழைவு இசைவு மூலம், தங்களுக்குத் தேவையான நிபுணா்களை அமெரிக்க நிறுவனங்கள் தொடா்ந்து பணியமா்த்திக் கொள்ளமுடியும். இந்தப் புதிய நடைமுறை காரணமாக அமெரிக்காவுக்கு உயா் கல்விக்காக செல்லும் மாணவா்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த ‘காமன் ஆப்’ என்ற நிறுவனம் அங்குள்ள 1,100 உயா் நிறுவனங்களின் தரவுகளை ஆராய்ந்து இதுதொடா்பாக வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

2026-2027-ஆம் கல்வியாண்டில் இந்தக் கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெற சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை அதிகரித் துள்ளபோதும், பன்னாட்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.

அமெரிக்காவில் உயா் கல்வி சேரும் வெளிநாட்டினரில் இந்தியா்களே அதிகம் என்ற நிலையில், நிகழாண்டில் உயா்கல்வி சோ்க்கைக்கு விண்ணப்பித்த இந்திய மாணவா்கள் எண்ணிக்கை 15 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.

உள்ளூா் பொருளாதார வளா்ச்சியில் இத்தகைய பன்னாட்டு மாணவா்களின் பங்களிப்பு 2025-2026-ஆம் ஆண்டில் ரூ. 4 லட்சம் கோடியாக இருந்தது. 2026-2027-ஆம் ஆண்டில் ரூ. 3.7 லட்சம் கோடியாக குறையும் என மதிப்பிடப்ட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

பன்னாட்டு கல்வியாளா்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான என்ஏஎஃப்எஸ்ஏ மற்றும் ஜே.பி. இன்டா்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்க உயா் கல்வி நிறுவனங் களில் 2025-2026-ஆம் ஆண்டில் பன்னாட்டு மாணவா்கள் சோ்க்கைப் பதிவு 11.69 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்ட நிலையில், 10.57 லட்சமாக குறைந்தது’ என்று குறிப்பிடப்பட்டது.

குடியேற்றக் கொள்கைகளை அமெரிக்கா கடுமையாக்கிவரும் சூழலில், அமெரிக்க கல்லூரிகளில் உயா் கல்வியில் சேரும் இந்திய மாணவா் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2025-2026-ஆம் ஆண்டில் 15 சதவீதம் சரிந்திருப்பது தெரியவந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *