திருவண்ணாமலை பெரியார் பெருந்தொண்டர் கடா.கண்ணன், சரஸ்வதி அம்மாள் நூற்றாண்டு விழா

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருவண்ணாமலை, ஆக. 25– 22.8.2026 அன்று மாலை 7 மணி யளவில் மறைந்த சுயமரியாதைச் சுடரொளி சா.கடா கண்ணன் அவர்களின் நூற்றாண்டு விழா திருவண்ணாமலை கலைஞர் அரங்கில் வெகு சிறப்பாக நடை பெற்றது.

விழாவில் கழக மாவட்டக் காப்பாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் தலைமை ஏற்று புகழ் மாலை சூட்டி உரை வழங்கினார், மாவட்டச் செயலாளர் ப.அண்ணாதாசன் முன்னிலை வகித்தார்,

கா பன்னீர்செல்வம் அறிமுக உரையாற்றினார்,

மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, சாதி கலைத்தோர் சங்க நிறுவனத் தலைவர் வேட்டவலம் கு.அரிகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர், அதனைத் தொடர்ந்து மேனாள் சட்டப்பேரவைத் துணைத் தலைவர்  கு.பிச்சாண்டி அவர்கள் சா.கடா கண்ணன் மற்றும் சரஸ்வதி அம்மாள் ஆகியோரின் படங்களை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார், அதனைத் தொடர்ந்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.சிறீதரன், மாநகர திமுக செயலாளர் ப.கார்த்திக் வேல்மாறன், வழக்குரைஞர் பழனி, தீபலட்சுமி சாம்ராஜ் திமுக மகளிர் அணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்,போளூர் நகர தலைவர் பழனி, சேது,பகுத்தறிவாளர் கழக நகர அமைப்பாளர் அறிவரசு மற்றும் உறவினர்கள் பலர் நினைவுரை வழங்கினர். விழா நிறைவில் (கடா) கண்ணன் தலை மகன் நன்றி கூறினார். பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *