தஞ்சாவூரில் காவிரி டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மதுரை, ஆக. 25- தஞ்சாவூரில் காவிரி டெல்டா கிராமங்களில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் ராய முண்டான்பட்டியைச் சேர்ந்த ஜீவகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது.

திருவையாறு தாலுகா ஆச்சனூர், வைத்திய நாதன்பேட்டை, பனவெளி, சாத்தனூர் மற்றும் பூதலூர் தாலுகா வில் மகாராஜபுரம், புதுகிரி வனரங்குடி, கழுமணங்குளம், கல்லாப்பெரும்பூர் கோவிலாடி மற்றும் சுக்கம்பர் ஆகிய இடங்களில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.

இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே டெல்டா பகுதிகளில் மணல் அள்ளக்கூடாது என்றும், சட்டவிரோத மணல் குவாரியால் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பீட்டை மதிப்பீடு செய்யவும் உத்தரவிட வேண்டும்.” என்று கூறப்பட்டிருந்து. மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது.

மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிடுகை யில், “காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணல் குவாரிகளை தொடர்ந்து அனுமதித்தால் வேளாண் மண்டலம் அறிவிப்புக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்” என்றார்.

அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், “மனுதாரர் குறிப்பிட்டுள்ள பகுதி களில் 4,40,335 கன மீட்டர் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதுவரை லாரிகளில் 2,65,174 கனமீட்டரும், மாட்டு வண்டிகளில் 914.51 கன மீட்டரும் மணல் அள்ளப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மணல் அள்ளப்படவில்லை. தற்போது மணல் அள்ளுவது நிறுத்தப் பட்டுள்ளது” என தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் குறிப்பிட்ட கிராமங்களில் மணல் குவாரிகள் நிறுத்தப் பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இப்பகுதிகளில் இனிமேல் மணல் அள்ளக் கூடாது. மணல் குவாரிக்கு அனுமதி கோரும் விண்ணப் பங்களை அதிகாரிகள் பரிசீலிக்கக் கூடாது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இப்பகுதியில் எக்காரணம் கொண்டும் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது.” என்று தெரிவித் துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *