ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு ஆறு மாதங்களாக தலைவரை நியமிக்காதது ஏன்? தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 25- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத் தலைவரை கடந்த 6 மாதங்களாக நியமிக்காதது ஏன்? என தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம், உச்சிமலை குப்பம் பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் சி.பொன்னுசாமி, சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது:

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக் காகவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வன் கொடுமைகளைத் தடுக்கவும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

இதற்கான சட்டம் 2021ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர்.சிவகுமார் தலைவராக நியமிக்கப்பட்டு 3ஆண்டு கள் பணியாற்றினார்.

அவருக்குப் பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் எஸ்.தமிழ் வாணன் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி மறைவுற்றார்.

அவர் மறைந்த பிறகு, கடந்த 6 மாதங்களாக ஆணையத்தின் தலைவர் பதவி காலியாக உள்ளது. இதனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை கள், உரிமைகள் பறிப்பு தொடர்பான புகார் களை விசாரித்தல், அரசுக்கு பரிந்துரைகளை வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளுதல், சட்ட அமலாக்கத்தை கண்காணித்தல் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பணிக ளை ஊக்குவித்தல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு எதிராக பள்ளிகளில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன.

இவற்றைக் கவனத்தில் கொண்டு ஆணையத்தின் தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் மற்றும் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைச் செயலருக்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி மனு அனுப்பினேன்.

ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை ஆணையத்தின் தலைவராக உடனடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம் பர் 9ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *