என்ன மனிதநேயம் மூளைச் சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் கொடை

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக.25 பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் கொடை அளிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு குறைந்த வயதுடைய குழந்தையிடம் உறுப்புகளைக் கொடை பெறுவது தமிழ்நாட்டிலேயே இது முதல்முறையாகும்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஓராண்டு 7 மாதங்களே ஆன குழந்தை ஒன்று ஹைட்ரோசெபாலஸ் எனப்படும் பிறவிக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 6 நாள்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தது. மூளைத் தண்டுவட நீர் தலைக்குள்ளேயே சேகரமாகி திசுக்களை சேதப்படுத்தும் பாதிப்பு அது.

அத்தகைய பிரச்சினைக்குள்ளாகி குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் அதிதீவிர சிகிச்சைகளை அளித்து வந்தனர். ஆனாலும், குழந்தையின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் மூளைச்சாவு அடைந்தது.

இதையடுத்து குழந்தையின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்க பெற்றோர் முன்வந்தனர். அதன்படி இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டன.

இந்த உன்னத செயலுக்காக தமிழ்நாடு அரசின் சார்பில் குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனை சார்பில் குழந்தையின் உடலுக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

இதற்கு முன்பு, 1 வயது 8 மாதம் வயதுடைய குழந்தை இதே மருத்துவமனையில் உடல் உறுப்புகளை கொடை செய்ததே இதுவரை குறைந்த வயதுடைய உறுப்பு கொடையாளராக இருந்தது. தற்போது இக்குழந்தை, தனது தியாகத்தால் அந்த சவுரவத்தைக் கைப்பற்றியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *