காவல்துறை கைது செய்தபோது அச்சமின்றி புன்னகைக்கும் சிறுமி சமூக வலைதளங்களில் வைரலாகும் உத்தரப் பிரதேச காவல் வாகனக் காட்சி

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

லக்னோ, ஆக. 24- உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் பள்ளியை சீரமைக்க வேண்டி போராடிய பள்ளி மாணவிகளை போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தார்கள் என்று கூறி கைது செய்து காவல்துறையினர் தூக்கிச் செல்லும்போது புன்னகையோடு கைதான சிறுமியின் படம் ஒன்று சமுகவலைத் தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது

நீட் மற்றும் நுழைவுத் தேர்வு மோசடிகள்

தலைநகர் டில்லியில் நீட் மற்றும் நுழைவுத்தேர்வு மோசடிகள் தொடர்பாக நடந்த போராட்டத்தில் இளைஞர்கள் பெருமளவில் முன்னின்று வழிநடத்தி அதில் அவர்களின் கோரிக்கையால் தர்மேந்திரப் பிரதான் பதவி விலகியது  ஒன்றிய அரசு பெரும் ஆத்திரத் திற்குள்ளாக்கி உள்ளது. இளம் தலைமுறையினரின் போராட்டத்தின் ஊக்கம் எதிர்கால இளம் தலைமுறை யினரையும் தங்களது பள்ளியை சீர் செய்யுங்கள் என்று போராட ஊக்கமூட்டியது. நாடு முழுவதும் பல்வேறு பகுதி களில் பள்ளி மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் தங்கள் பள்ளியை சீரமைத்து நல்ல கல்விக் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று போராடிய பள்ளிச் சிறுமிகளை போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, காவல் துறையினர் கைது செய்து காவல் வாகனங்களில் ஏற்றியுள்ளது.

பொதுவாகக் கனமழை மற்றும் அவசரக் காலங்களில் பள்ளிச் சிறுமிகளைப் பாதுகாப் பாகக் குடைபிடித்து அழைத்துச் செல்லும் காவல்துறையினரின் மனிதநேயமிக்க காணொலிகள் சமூக வலைதளங்களில் பகிரப் படுவது வழக்கம். ஆனால், அதே காவல் துறையினர் சீருடை அணிந்த பள்ளிச் சிறுமிகளையும் கைது செய்து காவல் வேனில் தூக்கிச் செல்லும் காட்சிகள் தற்போது நாடு முழுவதும் பரவலான விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

இந்தச் நிகழ்வின் போது பதிவு செய்யப்பட்ட ஒளிப்படத்தில், பெண் காவலர் ஒருவர் தூக்கிச் செல்லும்போது எந்தவிதப் பயமும் இன்றி, முகத்தில் புன்னகையோடு காட்சியளிக்கும் ஒரு சிறுமியின் ஒளிப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

அச்சமற்ற அந்தச் சிறுமியின் அமைதியான புன்னகை, தற் போதைய போராட்டச் சூழலில் பொதுமக்களாலும் சமூக ஆர்வலர்களாலும் அதிகளவில் பகிரப்பட்டு, இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *