ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து பணம் எடுத்தால் கட்டணம் வசூலிப்பு !

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

லக்னோ, ஆக.22 இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.அய்., அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (பிஎஸ்பிடி) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான சேவைக் கட்டண விதிகளில் மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் 2026 அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (பிஎஸ்பிடி) வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்தில் முதல் 4 பணப் பரிவர்த்தனைகளை இலவசமாக மேற்கொள்ளலாம்.

அதற்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி கட்டணமாக வசூலிக்கப்படும்.

எஸ்.பி.அய்.யின் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், குறிப்பாக அடிக்கடி ஏ.டி.எம். அல்லது வங்கி கிளை மூலம் பணம் எடுப்பவர்கள், அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய கட்டண விதியை கவனத்தில் கொள்ள வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.அய். வலியுறுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *