‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80ஆம் ஆண்டு விழா மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

இன்று (19.8.2026) காலை திருநெல்வேலி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தொடர்வண்டி நிலையத்தில் மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் முன்னிலையில் எழுச்சிமிகுவரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் பேரா.சுப்ரமணியம், முனைவர் காந்திபாபு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர் சுப.நயினார், கவிஞர் குமாரசுவாமி மகன் இனியன், மருத்துவர்கள் உ.மானவீரன்-சண்முகப்பிரியா இணையர்கள், மாவட்ட மகளிரணித் தலைவர் இரா.பானுமதி, குமரி மாவட்ட கோட்டாறு கழகத் தலைவர் ச.ச.மணிமேகலை, சத்யாராணி, மாவட்ட துணைத் தலைவர் ந.மகேசு, மாவட்ட துணைச் செயலாளர் மாரி கணேசு, தஞ்சை ப.க.செயலர் தராசு சுப்ரமணியம், தென்கலம் வா.அய்யப்பன்,கு.வெள்ளைத்துரை, மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன், மாணவர் கழகச் செயலாளர் ம.இராகவன், திமுக வர்த்தகரணி மாநில துணைச் செயலாளர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ந.மாலைராசா உள்ளிட்டத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். மாலை ஆறு மணிக்கு நெல்லை வாகையடிமுனையில் ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா மாநாடு ஆசிரியர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறுகிறது.  நெல்லை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவ்ர்களிடம் பிரச்சார வாகனத்தில் வைப்பதற்காக தந்தை பெரியார் முக சிலையை பேராசிரியர் முனைவர் காந்தி பாபு வழங்கினார். (19.8.2026)

திராவிடர் கழகம்

* திருநெல்வேலி தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளரும், மேனாள் சட்டபேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், தி.மு.க. மாநில விவசாய அணி துணைச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். * நெல்லை மாநகராட்சி மேயர் கோ. இராமகிருஷ்ணன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். * தென்காசி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், சுயமரியாதைச் சுடரொளி பிரம்மநாயகம் குடும்பத்தினர் முத்து இருளப்பன், கனகா, தென்காசி மாவட்ட கழகத் தலைவர் வீரன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், ச. ராசேந்திரன், இரா. வேல்முருகன். (19.8.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *