போட்டித் தேர்வுகளில் வெற்றிக்கான வழிகாட்டும் இலவசப் பயிற்சி வகுப்புகள் பெரியார் அய்.ஏ.எஸ். அகாடெமி அறிவிப்பு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, வேப்பேரி: பெரியார் திடலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக போட்டித் தேர்வுப் பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பெரியார் அய்.ஏ.எஸ். அகாடெமி, 2026–2027ஆம் ஆண்டிற்கான புதிய பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுவதை முன்னிட்டு,  GROUP II , II-A  உள்ளிட்ட போட்டித் தேர்வு களுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக மூன்று நாட்கள் இலவச சிறப்பு வழிகாட்டுக் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்துகிறது.

இந்த இலவசக் கருத்தரங்கம் 20.08.2026 வியாழக் கிழமை முதல் 22.08.2026 சனிக்கிழமை வரை, காலை 10.00 மணி முதல்1.00 மணி வரை, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் அய்.ஏ.எஸ். அகாடெமி வளாகத்தில் நடைபெறுகிறது.

இன்றைய போட்டி நிறைந்த சூழலில், சரியான வழிகாட்டுதலும், திட்டமிட்ட முறையிலான தயாரிப்பும் போட்டித் தேர்வுகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக உள்ளன. இதனை கருத்தில்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு கேள்விகளுக்கு அனுபவமிக்க வல்லுநர்கள் விரிவான விளக்கங்களை வழங்க உள்ளனர்.

இந்நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்கள், போட்டித் தேர்வு வல்லுநர்கள் மற்றும் பெரியார் அய்.ஏ.எஸ். அகாடெமியின் முன்னாள் மாணவர்கள் பங்கேற்று, தங்களது அனுபவங்களையும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான நடைமுறை ஆலோசனைகளையும் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ள கல்லூரி மாண வர்கள், பட்டதாரிகள் மற்றும் அரசு வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்ட இளைஞர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்று பயனடையுமாறு பெரியார் அய்.ஏ.எஸ். அகாடெமி அழைப்பு விடுத்துள்ளது.

இருக்கைகள் வரம்பிற்குட்பட்டவை என்பதால், முன்பதிவு செய்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிகழ்ச்சி விவரம்:

நாள்: 20.08.2026 முதல் 22.08.2026 வரை

நேரம்:  காலை10.00 மணி முதல் 1.00 மணி வரை

இடம்:

பெரியார் அய்.ஏ.எஸ். அகாடெமி,

84/1, ஈ.வே.கி. சம்பத் சாலை, பெரியார் திடல், வேப்பேரி, சென்னை – 600 007.

முன்பதிவு மற்றும் தொடர்புக்கு

044-2661 8056,  90928 81663

வெளியீட்டாளர்:

தமிழ்கா. அமுதரசன், B.E., MBA

இயக்குநர், பெரியார் அய்.ஏ.எஸ். அகாடெமி,

வேப்பேரி, சென்னை – 600 007.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *