இந்நாள் – அந்நாள்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சூரியனில் மஞ்சள் நிற மண்டலத்தில் ஹீலியம் கண்டறியப்பட்ட நாள் இன்று (18-08-1868)

ஜான் சென் புகழ்பெற்ற பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் ஆகஸ்ட் 18, 1868 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில் நிகழ்ந்த சூரிய மறைப்பை (சூரிய கிரகணத்தை) ஆய்வு செய்தபோது, சூரியனின் நிறக்கோளத்தில் (Chromosphere) ஒரு தனித்துவமான மஞ்சள் நிறக் கதிர் வீச்சைக் கண்டறிந்தார். இதுவே பூமியில் கண்டறியப் படுவதற்கு முன்பு விண்வெளியில் (சூரியனில்) கண்டுபிடிக்கப்பட்ட முதல் தனிமமான ஹீலியம் (Helium) ஆகும். 1868 இல் குண்டூரில் சூரிய மறைப்பின்போது ஸ்பெக்ட்ரோஸ்கோப் (Spectroscope) கருவி மூலம் சூரிய ஒளியை ஆய்வு செய்து புதிய மஞ்சள் நிறக் கோட்டைக் கண்டறிந்தார்.
சூரிய மறைப்பு இல்லாமலேயே பகல் நேரத்தில் கூட சூரியனின் கரோனா மற்றும் கதிர்வீச்சைக் கணிக்கும் முறையை உருவாக்கினார்.
சூரியனை தொடர்ந்து ஆய்வு செய்ய ஒளிப் படக் கலையை (Photography) வானியலில் முதன் முதலில் தீவிரமாகப் பயன்படுத்தியவர் இவரே ஆவார்.

உலக மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சி
நாள் இன்று (ஆகஸ்ட் 18, 2026)

மார்பகப் புற்றுநோய்க்கான மருத்துவ ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் புதிய சிகிச்சைகளை மேற்கொள்ளவும் , இதற்காக உழைக்கும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களை பாராட்டவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
தகவல் : பாணாவரம் பெ.வீரமணி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *