டெக்கான் கிரானிக்கல், சென்னை :
* ராமன் கோயில் நிதி மோசடி – விரைவான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு: ராமன் கோயில் நிதி மோசடி தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. அறிக்கையைப் பரிசீலித்த பின், நன்கொடை முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 24 நாள் போராட்டத்திற்குப் பின் ஜார்க்கண்ட் அரசு ஜே.எஸ்.எஸ்.சி. (JSSC) தேர்வை ரத்து செய்தது: மாணவர்களின் 24 நாள் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, ஜே.எஸ்.எஸ்.சி. (JSSC–CGL) தேர்வை ரத்து செய்து ஜார்க்கண்ட் முதலமைச்சர் அறிவித்தார்; புதிய தேர்வு நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் குறித்த புகார்களைத் தொடர்ந்து, என்.டி.ஏ. தேர்வு செயல்முறைகளையும் தணிக்கை செய்ய ஒன்றிய கல்வி அமைச்சர் உத்தரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “நான் உத்தரகாண்ட் சென்ற பிறகு சுத்திகரிப்பு செய்தீர் களே; இதைத்தான் உங்கள் மதம் போதிக்கிறதா?” – பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடும் தாக்கு
தி இந்து:
* மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கேள்வித்தாளில் ஓபிசி பிரிவு இல்லை – காங்கிரஸ் கண்டனம்: கணக்கெடுப்பு கேள்வித்தாளில் ஓபிசி-களுக்கு தனிப்பிரிவு இடம்பெறாதது சமூக நீதிக்கு எதிரானது என்றும், ஓபிசி மக்களின் உண்மையான மக்கள் தொகையை கணக்கிட முடியாத நிலை ஏற்படும் என காங்கிரஸ் ஓபிசி பிரிவு தலைவர் அனில் ஜெய்ஹிந்த் தெரிவித்துள்ளார்.
தி டெலிகிராப்:
* டில்லி நோக்கி விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம் – எல்லையில் போராட்டம் தொடர்கிறது: அரியானா காவல்துறை டில்லி நோக்கிச் சென்ற விவசாயிகளின் பேரணியை தடுத்த நிலையில், காநவுரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
– குடந்தை கருணா
