வீட்டு சமையல் எரிவாயு இகேஒய்சி சரிபார்ப்பு! கால அவகாசம் ஆகஸ்ட் 23 வரை நீட்டிப்பு!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 17- தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளர்கள் (உண்மைத் தன்மை சரிபார்ப்பு) செய்வதற்கான கால அவகாசத்தை ஒன்றிய அரசு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

பின்னணி மற்றும் அவகாச
நீட்டிப்புக்கான காரணம்

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 2.40 கோடி வீட்டு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மானியம் பெறும் வாடிக்கையாளர்கள் தங்களின் விவரங்களை e-KYC மூலம் சரிபார்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், தமிழ்நாட்டில் சுமார் 10 சதவீத வாடிக்கையாளர்கள் இன்னும் சரிபார்ப்பை நிறைவு செய்யாமல் உள்ளனர். இதனால் எரிவாயு முகவர் அலுவலகங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கடுமையான கூட்ட நெரிசலும், தொழில் நுட்பச் சிக்கல்களும் ஏற்பட்டன. பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எழும் புகார்கள் & பொதுமக்கள் கோரிக்கை

தொடர்ச்சியாக புதிய சரிபார்ப்பு நடைமுறைகளைக் கட்டாயப்படுத்துவதால் பொதுமக்கள் கூடுதல் அலைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக முதியோர்கள் மற்றும் நேரில் செல்ல முடியாதவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வாடிக்கையாளர்களுக்குச் சுமையை ஏற்படுத்தாமல், எளிமையான மற்றும் வெளிப்படையான முறையில் சேவைகளை வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இகேஒய்சி செய்வது எப்படி?

இன்னும் சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 23-க்குள் தங்களின் எரிவாயு முகவர் அலுவலகங்களை அணுகியோ அல்லது சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் கைப்பேசி செயலிகள் மூலமாகவோ தங்களது விவரங்களைப் பதிவு செய்து இகேஒய்சி-அய் நிறைவு செய்து கொள்ளலாம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *