பொதுத்துறை நிறுவனமான எல்.அய்.சி.யின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தஞ்சாவூர், ஆக. 17- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மேனாள் தொழிற் சங்க தலைவர்களின் கூட்டமைப்பின் (AFCCOM) பத்தாவது பொதுக்குழு கூட்டம் 16. 8.2026 அன்று தஞ்சாவூர் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாளிகை, சரோஜ் நினைவகத்தின், என். எம். சுந்தரம் அரங்கில் நடந்தது.

பொதுக்குழு கூட்டத் துக்கு இவ்வமைப்பின் தலைவர் எஸ். பி. இராமன் தலைமை வகித்தார். இச்சங்கத்தின் மேனாள் பொதுச்செயலாளர் டி.சிங்காரவேலு, துணைத்தலைவர் டி.வி.சந்திரசேகரன், துணைச் செயலாளர் எம். முருகையா, பொருளாளர் என். சுப்பிரமணியன், உதவிப் பொருளாளர் வீ. பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வருகை தந்த அனை வரையும் மதுரை பரவை எஸ்.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். சென்னை ரத்தினவேல் சுப்பிரமணி நன்றியுரை ஆற்றினார்.

நீண்ட விவாதங்களுக்கு பிறகு நாட்டின் நலன், வங்கி ஓய்வூதியர்களின் நலன் சார்ந்த கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

கடந்த நிதியாண்டில் ஒன்றிய அரசு ஏழு பொதுத்துறை நிறு வனங்களின் பங்குகளை விற்று 21000 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. பொதுத்துறை நிறுவன மான எல்.அய்.சி. பாலிசிதாரர்களின் தொடர்ந்து நம்பிக்கையை பெற்று வருவதோடு, நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பெரும் பங்கு ஆற்றியுள்ளது வரலாற்று பேருண்மை. பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை விற்று மெல்ல மெல்ல தனியார் மயமாக்கும் போக்கு நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து, எல்.அய்.சி. பங்குகளை விற்பனை செய்யும் (OFFER FOR SALE – OFS) முடிவை ஒன்றிய அரசு தாமதமின்றி கை விட வேண்டுமென AFCCOM வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையா ளர்களிடம் மினிமம் பேலன்ஸ் வைக்காததற்காக தண்டனையாக பிடித்தம் செய்யப்பட்ட ரூபாய் 26100 கோடியை திரும்ப அளிப்பதோடு, இத்தகைய தவறான நடைமுறையை தாமதமின்றி கைவிட பொதுத்துறை வங்கிகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும்.

வங்கி ஓய்வூதியர்க ளுக்கு பஞ்சப்படி உயர்வை மூன்று மாதங் களுக்கு ஒரு முறை வழங்கும் நடைமுறையை தாமதமின்றி நடைமுறைப் படுத்த பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள் முன்வர வேண்டும்

பென்சன் மறுபரி சீலனை செய்யாமல் (PENSION UPDATION) கடந்த முப்பது ஆண்டுகளாக பாதிப்படைந்து வருகிற எட்டு லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கு தாமதமின்றி நீதி வழங்க பொதுத்துறை வங்கிகள் நிர்வாகம் முன் வரவேண்டும்

மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போல இலவச பேருந்து பயண வசதி அளிக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்

பங்கேற்றோர்

இக்கூட்டத்தில் எஸ்.கருணாகரன், பொதுக் குழுவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எம்.சந்திரா கில்பர்ட், என்.பாண்டுரங்கன், புதுச்சேரி கோவை எம்.ரகுநாதன், வேலூர் ஆர்.லோகநாதன், குன்னூர் எம்.ராஜகோபால், நாகர்கோவில் அகமது ஹுசைன், இக்கூட்டமைப்பின் செயலாளர் எம். கே. மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், ஒரத்தநாடு ஸ்டேட் பேங்க் ஸ்டாப் யூனியன் முன்னாள் செயலாளர் வி.சம்பத் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை செய்திருந் தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *