‘வந்தே மாதரம்’ பாட திருச்சபைகள் கூட்டமைப்பு எதிர்ப்பு

சிறப்பு புத்தக சலுகைகள்

கோஹிமா, ஆக.16  ‘வந்தே மாதரம் பாடல் பாடுவதை கட்டாயமாக்கும் எந்த உத்தரவும் கடும் எதிர்ப்புக்கு ரியது’ என, நாகாலாந்து கிறிஸ்துவ திருச்சபைகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

‘வந்தே  மாதரம்’  இயற்றப் பட்டு   150 ஆண்டுகள் நிறைவ டைந்துள்ளது. இதையொட்டி, ‘அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன், ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும்’ என, ஒன்றிய அரசு, கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது.

இந்த பாடலை அவமதிப்ப வர்களுக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில், ஒன்றிய அரசு கொண்டு வந்த மசோதாவும் நாடாளு மன்றத்தில்  நிறைவேறியது.

இந்நிலையில், வந்தே மாதரம் பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்ற உத்தர வுக்கு, வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் உள்ள கிறிஸ்துவ திருச்சபைகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தேசபக்தியைக் கட்டாயப்படுத்துவதா?

இது குறித்து, நாகாலாந்து பாப்டிஸ்ட் திருச்சபை கவுன்சிலின் பொதுச் செயலர் ரெவ் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாட்டின் தேசிய சின்னங்கள், தேசபக்தி உணர்வுகள், அரசிய லமைப்புச் சட்டங்களை நாகாலாந்து திருச்சபைகள் கூட்டமைப்பு முழு மையாக மதிக்கிறது. அதே சமயம், தேசபக்தி உணர்வைக் கட்டா யப்படுத்தி வரவழைப்பதை ஏற்க முடியாது.

தனித்துவம்

நம் நாட்டின் அரசியலமைப்புக் கட்டமைப்பு என்பது சுதந்திரம், சமத்துவம், பன்முகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. தேச ஒற்றுமையை ஒரேமாதிரி தன்மையுடன் ஒப்பிடக்கூடாது. தேசபக்தியை வெளிப்படுத்துவதை வைத்து, ஒரு குடிமகனின் தேசத்தின் மீதான அன்பை அளவிட முடியாது.

இந்தியாவின் பல்வேறு நம்பிக்கைகள், கலாசாரங்கள், மொழிகள், மரபுகள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவை நாட்டின் தனித்துவமான அடையாளங்கள். தேசிய சின்னங்கள் அல்லது நடை முறைகள், வெவ்வேறு சமூகங்க ளுக்கு வெவ்வேறு அர்த்தத்தை கற்பிக்கின்றது.

அரசு மற்றும் பொது நிறுவ னங்கள் நிதானத்துடனும், உணர்வுப் பூர்வமாகவும் செயல்பட வேண்டும். எனவே, வந்தே மாதரம் பாடல் பாடுவதை கட்டாயப்படுத்த முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *