தமிழ்நாட்டை விட்டு ஆந்திரா செல்லும் கப்பல் கட்டும் தள நிறுவனம்!

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக.16  தூத்துக்குடி மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க ஒப்பந்தம் செய்த, ‘மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ்’ நிறு வனத்தின் உயரதிகாரிகள், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவைச் சந்தித்து பேசியுள்ளனர். எனவே, அந்நிறுவனத்தின் முதலீடு, ஆந்திர மாநிலத்திற்குச் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒன்றிய அரசின், ‘மசகான்  டாக் ஷிப் பில்டர்ஸ்’ நிறுவனம் தூத்துக்குடியில், 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்துடன் குஜராத்தில், 2025 செப்டம்பரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

தூத்துக்குடியில் நிலம் ஒதுக்கீட்டில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால், மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம் தமிழ் நாட்டிற்கு பதில், ஆந்திராவில் முத லீடு செய்ய இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபுவை, இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் இம்மாதம், 11 ஆம் தேதி சந்தித்து பேசியுள்ளனர்.

இச்சந்திப்பின் போது, ‘நாட் டின் கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் கடல்சார் தொழில் துறை வளர்ச்சியில் ஆந்திரா பங்க ளிக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என, அந்நிறு வன அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க ஒப்பந்தம் செய்த நிறுவனத்தின் முதலீடு, ஆந்திர மாநிலத்திற்கு செல்வதாக தெரிய வந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *