கருநாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி!

சிறப்பு புத்தக சலுகைகள்

சாம்ராஜ்நகர், ஆக.16 கருநாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் ஷாக்யா வனப்பகுதியில் நடந்த என்கவுண்டரில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

வனப்பகுதிக்குள் மான் வேட்டையாடி இறைச்சியைப் பிரித்துக் கொண்டிருந்த கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்ததாகவும், அப்போது அவர்கள் நாட்டுத் துப்பாக்கியால் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால், தற்காப்புக்காக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் கருநாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறைக்கு எதிராக மக்கள் போராட்டம்

ஆனால், கருநாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் வேட்டையாடச் செல்லவில்லை என்றும், காணாமல் போன மேய்ச்சல் மாடுகளை தேடிச் சென்றவர்கள் என்றும் இருட்டி விட்டதால் வனப்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்றும், அவர்களை என்கவுண்டரில் கொன்றுவிட்டதாகவும் கூறி அவர்களது உறவினர்களும், கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருநாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் தோமையார்பாளையம், மாரியமங் கலம் பகுதியைச் சேர்ந்த தமிழர் கள். இறந்தவர்களின் உறவினர்கள் கொள்​ளே​கால், ஹனூர், தோமை​யார் பாளை​யம், ஜகன்​னாத தொட்டி உள்​ளிட்ட இடங்​களில் உள்ள‌ வனத்​துறை அலு​வல​கங்களை அடித்து நொறுக்​கினர்.

இந்த என்கவுண்டர் சம்​பவத்தை கண்​டித்து 100-க்​கும் மேற்​பட்​டோர் மைசூர், மேட்​டூர், சத்​தி​யமங்​கலம் ஆகிய இடங்​களுக்கு செல்​லும் சாலைகளை மறித்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதனால் அங்கு பதற்​றம் ஏற்​பட்ட​தால் காவல்துறையினர் குவிக்​கப்​பட்​டு, பலத்த பாது​காப்​பு போட‌ப்​பட்​டுள்​ளது.

உரிய நியாயம் வேண்டும்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “கொல்லப்பட்ட 3 பேரும் மாடு மேய்க்கச் சென்றவர்கள். அவர்களை மான் வேட்டைக்கு சென்றதாக சந்தேகப்பட்டு வனத்துறையினர் நெஞ்சில் சுட்டு கொன்றிருக்கிறார்கள். உயிரிழந்த 3 பேருக்கும் உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம். சம்பந்தப்பட்ட வனத்துறையினரை பணி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவகு​மார், “இந்த தாக்​குதலில் 3 பேர் உயிரிழந்​துள்ளனர். காயமடைந்த ஒரு​வர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். அவர்​கள் நடத்​திய தாக்​குதலில் வனத்​துறையை சேர்ந்த ஒரு​வர் காயமடைந்​துள்ளார். கொல்​லப்​பட்​ட​வர்​களிடம் இருந்து 2 நாட்டு துப்​பாக்​கி​கள், மான் இறைச்சி ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த சம்​பவம் குறித்து விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு சாம்​ராஜ்நகர் மாவட்ட அதிகாரி​களுக்​கு உத்​தர​விட்​டுள்​ளேன்​” என்த் தெரிவித்துள்ளார்​.

தடையடி நடத்திக் கலைத்தனர்

இந்நிலையில், ஹனூரில், வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மூவரின் உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கூறியும் அவர்கள் கலைந்து செல்லாததால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *