உரத்தநாடு, ஆக. 16- உரத்தநாடு நகரம், வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 14-08-2026 அன்று மாலை 6.30 மணியளவில் உரத்த நாடு மன்னார்குடி முக்கத்தில் கழக கொள்கை விளக்க தெருமுனைக் கூடம் எழுச்சியுடன் நடைபெற்றது.
உரத்தநாடு நகர செயலாளர் பு. செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
உரத்தநாடு நகரத்தலைவர் பேபி. ரெ.இரவிச்சந்திரன் தலைமையேற்று உரையாற்றினார்.
மாவட்ட துணைச்செயலாளர் கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன், ஒக்கநாடு கீழையூர் ஓய்வு பெற்ற கிராமநிர்வாக அலுவலர் வெ.துரை, கண்ணைக்கிழக்கு பொறியாளர் அரங்க.குமரவேல், உரத்தநாடு வடக்குஒன்றிய துணைச்செயலாளர் கக்கரை.கோ. இராமமூர்த்தி,நகர இளைஞர் அணி செயலாளர் மா.சாக்ரட்டீஸ், வடக்குஒன்றிய இளைஞர் அணி துனைச்செயலாளர் இரா.இராஜதுரை, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.என்.குணசேகரன், திமுக 13 ஆவது வட்ட செயலாளர் ஷேக். முகமதுகனி, மேனாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஷேக்தாவூது, விடுதலை வாசகர் வட்ட துனைச் செயலாளர் விசுவநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், மாவட்ட செயலாளர் அ. அருணகிரி ஆகியோர் தொடக்கவுரையாற்றினர்.
கழக கழக பேச்சாளர் இராம. அன்பழகன் சிரப்புரையாற்றினார்.
நகர இளைஞர் அணி தலைவர் பெறியாளர் ச.பிரபாகரன் நன்றி கூறினார்.
திரளான பொதுமக்கள் கருத்துக்களை கேட்டனர்.
