வண்ண ஒளிப்படத்தைக் கண்டுபிடித்த அறிவியலாளர் காபிரியேல் லிப்மன் பிறந்தநாள் இன்று (16-08-1845)
காபிரியேல் லிப்மன் ஆகஸ்ட் 16, 1845 அன்று லக்சம்பர்க் நாட்டில் பிறந்தார். சிறு வயதிலேயே இவரது பெற்றோர் பாரிசுக்குக் குடிபெயர்ந்தனர். பிரான்சிலும் ஜெர்மனியிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் இயற் பியல் மற்றும் அறிவியல் கல்வி பயின்றார். பாரிஸ் பல்கலைக்கழகத்தில் (Sorbonne University) பேராசிரியராகப் பணியாற்றினார்.
குறுக்கீட்டு விளைவின் (Interference) அடிப் படையில் ஒளிப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரித் தெடுத்தவரும், வெள்ளொளி யில் அடங்கிய பல்வேறு நிறங்களைப் பயன்படுத்தி வண்ண ஒளிப்படங்கள் எடுக்க லாம் என உலகிற்கு அறிவித்து அதை செயல்படுத்தியும் காட்டியவருமான காபிரியேல் லிப்மன் அவர்களின் இன்றைய நாளில்தான் (16-08-1845).
ஒளியியல் மற்றும் வண்ணப் ஒளிப்படக் கலையில் புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய ஒரு பிரெஞ்சு இயற்பியலாளர் ஆவார். குறுக்கீட்டு விளைவு (Interference) கோட்பாட்டைப் பயன்படுத்தி இயற்கை வண்ணங்களை ஒளிப்படமாகப் பதிய வைக்கும் முறையைக் கண்டுபிடித்ததற்காக இவர் 1908 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
வெள்ளொளியின் குறுக்கீட்டு விளைவைப் பயன்படுத்தி கண்ணாடித் தகடுகளில் நிரந்தர வண்ணப் ஒளிப்படங்களை உருவாக்கும் முறையை 1891 இல் வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டினார்.
கோலியோஸ்டாட்: விண்மீன்களைத் துல்லிய மாகப் ஒளிப்படம் எடுக்க உதவும் வானியல் கருவியைக் கண்டுபிடித்தார்.
வெப்ப இயக்கவியல், ஒளி வேதியியல் மற்றும் மின்னியல் துறைகளில் பல அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இவர் ஜூலை 13, 1921 அன்று வட அமெரிக்காவிலிருந்து கப்பலில் திரும்பும் போது அட்லாண்டிக் பெருங்கடலில் காலமானார்.
தகவல்: பாணாவரம் வீரமணி
