ஜனநாயக விரோத முறையில் சொத்துவரி உயர்வு மாமன்ற கூட்டங்களை நடத்த அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை! இந்திய கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 15- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று (14.8.2026)வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாநகராட்சி உள்பட தமிழ்நாடு முழுவதும் நகராட்சி பகுதிகளில் சொத்துவரியை கடுமையாக உயர்த்துவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மாமன்ற கூட்டங்கள் முறைப்படி நடத்துவதற்கு நகராட்சித்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் நிர்வாக உத்தரவு மூலம் சொத்துவரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் வழிகாட்டுதல்படிதான் நடைபெறுகிறதா? என்கிற வினாவும் எழுந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், மக்கள் குடும்பம் நடத்துவதே சவாலாக உள்ள நிலையில், சொத்து வரிகளை உயர்த்துவதை முதலமைச்சர் ஜோசப் விஜய் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *