சென்னையில் சொத்துவரி உயர்வை நிரந்தரமாகக் கைவிடாவிட்டால் தி.மு.க. சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

4 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

அமைச்சர் நிர்மல்குமார் அவதூறுப் பேச்சுக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மறுப்பு!

சென்னை, ஆக.15 பச்சையாகப் பொய் சொல்கிறார் நிர்மல் குமார் என்றும், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யில் இருந்த நிர்மல் குமாருக்கு மற்றவர்களைப் பற்றி பேச யோக்கியதை கிடையாது என்றும், சென்னையில் சொத்து வரி உயர்வை முழுமையாகக் கைவிடாவிட்டால் தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெறும் என்றும் அமைச்சர் நிர்மல் குமாரது அவதூறு பேச்சிற்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவரது அறிக்கை வருமாறு:–

அமைச்சர் நிர்மல் குமாருக்கு வாயில் உண்மையே வராது. அதற்கு காரணம், அவர்
ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்தவர்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி.யில் இருந்தவருக்கு மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது. நாங்கள் தொடக்கத்திலிருந்தே பாஜகவை எதிர்த்தவர்கள்; இன்றும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கி றோம்.

தளபதி அவர்கள் அன்று கருப்புச் சட்டை அணிந்து…

கடந்த முறை நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்டபோது, திமுக-வால் தான் அது தோற்கடிக்கப்பட்டது. எங்கள் தலைவர் தளபதி அவர்கள் அன்று கருப்புச் சட்டை அணிந்து, அந்தச் சட்ட மசோதாவையே எரித்து எதிர்ப்பைப் பதிவு செய்தார். அதற்குப் பிறகுதான் அது தோற்க டிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

தி.மு.க. மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டது- நாங்கள் கொடுத்த சில திருத்தங்களை மசோதாவில் சேர்த்து வைத்தால், அதை ஆதரிப்பதா, இல்லையா என்பதைப் பார்த்துதான் முடிவு செய்ய முடியும். ஆனால், இவர்கள் ஊழலை மறைப்பதற்காகத் திரும்பத் திரும்பத் திசை திருப்புகிறார்கள்.

தவறு செய்தவர்களை சிறைக்கு அனுப்பினோம்!

கோவையில் மாணவர் கொலை சம்பவம் நடந்துள்ளது. அன்று தி.மு.க. ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில் 85 நாட்களுக்குள் தண்டனை பெற்றுத் தந்து தவறு செய்தவர்களை உள்ளே சிறைக்கு அனுப்பினோம். ஆனால், தூத்துக்குடி பெண் பாதிக்கபட்ட விவகாரத்தில், அவர்கள் கட்சியினரே சம்மந்தப்பட்டிருப்பதாக புகார் அளித்தும் 100 நாள்கள் ஆகி யும் அதற்கு இன்னும் பரிகாரம் கிடைக்கவில்லை; கேசும் போட வில்லை, ஒன்றும் செய்யவில்லை.

நேற்று ஒரு மாநாடு நடந்தது. எவ்வளவு பெரிய மாநாடாக இருந்தாலும், ‘நான்காவது தூண்’  எனப்படும் பத்திரிகையாளர்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், பத்திரி கையாளர்களையே உள்ளே விடவில்லை. அங்கு என்ன நடந்தது என்று யாருக்குமே தெரிய வில்லை; முதலமைச்சரே பேசவில்லை. முதலீட்டாளர்கள் எல்லாம் வந்துவிட்டதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால், எங்கள் தலைவர் அன்றைக்குக் கொண்டு வந்து போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரண்டாம் கட்டத்திற்கான தொகையைப் போட்டிருக்கிறார்கள்; அவ்வளவு தான்.

தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல் முறை

அப்படி இருக்கும்போது பத்திரி கையாளர்களை அனுமதித்தால் என்ன? மக்களுக்கு உண்மைகள் வெட்டவெளிச்சமாகத் தெரிந்து விடும் என்பதற்காகவே இந்த ரகசியம். பத்திரிகையாளர்களையே அனுமதிக்காமல் ஒரு கூட்டத்தை நடத்துவது தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல் முறை.

அதேபோல, சென்னையில் சொத்து வரி/வீட்டு வரி பயங்கரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைக்குக் கார்ப்பரேஷனில் ‘சுய மதிப்பீடு’ (Self-Declaration) மூலம் வரி போடுகிறார்கள். அபார்ட்மெண்டில் 50 வீடுகள் உள்ள இடத்தில் இரண்டு பேருக்குத்தான் மதிப்பீடு செய்தார்கள் என்று பச்சையாக பொய் சொல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி மதிப்பீடு மற்றும் பட்டா இருக்கும். அப்படி தவறாக இருந்தால் சிஎம்டிஏ மூலம் அந்த கட்டடங்களை இடிக்க வேண்டியதுதானே? அந்த அதிகாரம் உங்களுக்கு இருக்கிறதே!

இப்படிப் பொய் பேசும் அமைச்சர்கள் தான் இன்றைக்கு இருக்கிறார்கள். நேற்றைய தினம் எங்கள் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளரும் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியம் கண்டன அறிக்கை வெளியிட்டு, மக்கள் மத்தியில் பெரிய கொதிப்பு ஏற்பட்ட பிறகு, தற்போது தற்காலி கமாக அதை நிறுத்தி வைப்பதாக சொல்கிறார்கள். நிரந்தரமான தீர்வை இவர்களால் சொல்ல முடியவில்லை. உள்ளாட்சித் துறை அமைச்சரும், அதிகாரிகளும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. இந்த வரி உயர்வைக் கைவிடாவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைப் பொறுத்தவரை, திமுக ‘Fair Delimitation’ என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை திமுக ஏற்றுக்கொண்டது. நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்பது தான் எங்கள் கொள்கை. நாடாளு மன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சொன்னோம்.

வரலாறு தெரிந்து
பேச வேண்டும்!

அவர் சர்க்காரியா கமிஷனைப் பற்றியெல்லாம் பேசுகிறார்; சர்க்காரியா கமிஷனுக்குச் சவால் விட்ட ஒரே தலைவர் எங்கள் தலைவர் கலைஞர் மட்டும்தான். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்தது; அவர்களால் ஒரு வழக்காவது போட முடிந்ததா? 2001 இல் இரவோடு இரவாகக் கலைஞரைக் கைது செய்தார்களே, அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் அவர்கள் ஆட்சியில்தான் இருந்தார்கள்; ஒரு வழக்கையாவது நிரூபிக்க முடிந்ததா? இதெல்லாம் வரலாறு தெரிந்து பேச வேண்டும்.

இவ்வாறு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *