அருவிக்குத்தி (கேரளா) பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தமா? தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்! மழை நின்றதும் பணிகள் தொடரும்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 15  கேரளா மாநிலம் அருவிக்குத்தியில் கட்டப்பட்டு வரும் பெரியார் நினைவு மண்டபக் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக நேற்று ஊடகங்களில் செய்தி  வெளி வரத் தொடங்கியது.  இதைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் பலரும் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர். இந்நிலையில் இந்தத் தகவல் தவறானது என்று தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கேரளத்தின் வைக்கம் அருகே அருவிக்குத்தி சிறை இருந்த இடத்தில் தந்தை பெரியார் நினைவு மண்டபக் கட்டுமானப் பணிகள் நிறுத்தம் என செய்தி வெளியாகியுள்ளது.

இது முற்றிலும் தவறான தகவல்.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அளித்துள்ள விளக்கத்தில், “கேரள மாநிலம் ஆறுக்குட்டிப் பகுதியில் பெய்து வரும் பருவ மழையால் கட்டட வெளிப்புறப்பணிகள் மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனினும் பணிகள் நிறுத்தப்படவில்லை. மழை நின்றவுடன் மீண்டும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்” என்று பொதுப் பணித் துறையின் விளக்கத்தைச் சுட்டிக் காட்டி அப்பதிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *