கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை விரைவில் திறக்க திட்டம்!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 15- நடப்பாண்டில் கிளாம் பாக்கம் புறநகர் ரயில் நிலையம் திறக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்தார்.

சென்னையில் செய்தி யாளர்களிடம், ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் நேற்று (14.8.2026) கூறியதாவது:

ஆதம்பாக்கம் ரயில் நிலைய தண்டவாளத்தில் தொழில்நுட்ப கோளாறு உள்ளது. தண்டவாளம் வளைந்து உள்ளதால், ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்குவதில் சிரமம் இருக்கிறது. எனவே, இதை சரி செய்யும் பணிகளில் ஈடுபட உள்ளோம்.

இப்பணிகளுக்கு ஒப்பந்தம் விட்டு, பணி நடைபெற உள்ளது. விரைவில், இந்த ஒரு ரயில் நிலைய பாதுகாப்பு பணிகளுக்கான சான்றிதழ் பெற்று ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையில், ஜிஎஸ்டி சாலையில் ஆகாய நடைபாதை பணிகள் மாநில அரசு தரப்பில் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, ரயில் நிலையத்தோடு இணைக்க வேண்டிய பணிகள் மீதம் இருக்கின்றன. பணிகளை முடித்து, நடப்பாண்டில் விரைவாக கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் திறக்க வாய்ப்புள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத் துக்கு 2ஆவது ஏசி மின்சார ரயில் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்ட வர திட்டமிடப்பட்டுள்ளது.

தாம்பரம் – கடற்கரை தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சேத்துப்பட்டு நிலையத்தில் நெடுநேரம் நிறுத்தி இயக்கப் படுவதால், பயணிகள் சிரமத்தை சந்திப்பதாக புகார்கள் வருகின்றன.

லோக்கல் பாஸ்ட் ரயில்களை விரைவு பாதை யில் இருந்து மின்சார ரயில் பாதைக்கு மாற்றி இயக்குவதால், இந்த தாமதம் ஏற்படுகிறது. விரைவில், இப்பிரச்சினை சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் செந்தில்குமார் கூறும்போது, “சென்னை கோட்டம் கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.5 ஆயிரத்து 38 கோடி வருவாய் எட்டியுள்ளது. 11.330 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

26 ரயில் நிலையங்களில் சிசிடிவி படக் கருவிகள் முழுவதுமாக பொருத்தப்பட்டுள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.720 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச்சில் முடிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *