தமிழரான உ.பி. அய்பிஎஸ் அதிகாரிக்கு குடியரசு தலைவர் விருது!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 15-  உத்தரப்பிரதேசத்தின் அய்பிஎஸ் அதிகாரி – தமிழரான ஜி.முனிராஜ் இந்த ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் பதக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும் ஆக.15இல் சிறந்த காவல் துறையினருக்காக குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்படுகிறது. மாநிலங்களால் பரிந்து ரைக்கப்படும் இந்த விருதினை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அங்கீகரித்து தேர்வு செய்வார். இதில், வீர, தீர செயல்களுக்கான விருது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது உயிரைப் பணயம் வைத்து நடத்தப்படும் முக்கியமான என்கவுன்ட்டர்களுக்கு மட்டுமானது.

இந்த வீர, தீர செயல் களுக்கான விருதுகள் இந்த ஆண்டு உபி-யின் 2 அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளில் ஒருவராக தமிழரான அய்பிஎஸ் அதிகாரி ஜி.முனிராஜ் இடம் பெற்றுள்ளார். இந்த பதக்க விருதுகள் விரைவில் டில்லியில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் வழங்குவார்.

கடந்த 2017இல் உபி முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அமர்ந்த பின் முதல் என்கவுன்ட்டர் நடத்தியவர் தமிழர் முனிராஜ். தொடர்ந்து தாம் பணியாற்றிய புலந்தஷெஹர், பரேலி, காஜியாபாத், அலிகர் மற்றும் ஆக்ராவில் பல என்கவுன்ட்டர்களை நடத்தி பல முக்கியக் குற்றவாளிகள் பிடித்துள்ளார். இவர்களில் 14 முக்கியக் குற்றவாளிகள் உயிரிழந்தனர். இது போன்ற அதிரடி நட வடிக்கைகளால் அவர் ‘உபி சிங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

தற்போது, முரதாபாத் காவல்துறை துணைத் தலைவரான முனிராஜ் பெற்ற விருது ஆக்ராவின் காவல்துறை சிறப்பு கண்காணிப்பாளராக இருந்தபோது நடத்திய என்கவுன்ட்டருக்காகக் கிடைத்துள்ளது. இவர் கொடூர ஆள் கடத்தல் கும்பலின் இரண்டு முக்கியக் குற்றவாளிகளான பதன்சிங், அக் ஷய் சிங் ஆகியோரை என்கவுண்டர் செய்ததற்காக அளிக்கப் பட்டுள்ளது. 2021இல் ஆக்ராவின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் உமாகாந்த் குப்தாவைக் கடத்தி ரூ.5 கோடி பிணைத் தொகை கேட்கப்பட்டது.

ராஜஸ்தான் எல் லையில் வனப்பகுதியில் மருத்துவரை மீட்டு, இருவரை முனிராஜ் என் கவுன்ட்டர் செய்திருந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு அய்பிஎஸ் முடித்த முனிராஜ் உபி மாநிலப் பிரிவு அதிகாரி. தர்மபுரியின் பாப்பாரப்பட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த முதல் பட்டதாரி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *