கியூரி மருத்துவமனை சார்பில் உறுப்பு கொடை நாள் விழிப்புணர்வுப் பேரணி

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 15- சென்னை கியூரி மருத்துவ மனை சார்பில் உறுப்பு கொடை நாள் விழிப்புணர்வு பேரணி சென்னை துரைப்பாக்கத்தில் நடைபெற்றது.

உலக உறுப்பு கொடை நாளையொட்டி, சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கியூரி (சென்னை சிறுநீரகம் மற்றும் ரோபோட்டிக்ஸ் நிறுவனம்) மருத்துவமனையின் சார்பில் ஒருவாரம் கல்லூரிகளில் மாணவர்களிடம், மருத்துவப் பயனாளிகளிடம் விழிப்புணர்வு, உறுப்பு தான உறுதிழொமி இயக்கம், கையெழுத்து இயக்கம், ஓவிய போட்டிகள், சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதியாக, உறுப்பு கொடை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கியூரி மருத்துவமனையில் இருந்து 2.6 கிலோமீட்டர் தூரம் நடந்த பேரணியை மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சிவராமன், மூத்த சிறுநீரக வல்லுநர் மருத்துவர் முத்து ஜெயராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், மாண வர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் என 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, உறுப்பு கொடையின் அவசியத்தை மக்களிடையே எடுத்துரைத்தனர்.

கியூரி மருத்துவமனையின் சிறுநீரக துறைத் தலைவர் மருத்துவர் அஜய் ரத்தூன், சிறுநீரக நிபுணர் மருத்துவர் செ.குகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருவார கால விழிப்புணர்வு நிகழ்வு என்பது, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் உறுப்பு கொடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பொதுவெளியில் நிலவும் தவறான நம்பிக்கைகளை நீக்குவது மற்றும் உறுப்பு கொடை தொடர்பான தங்கள் விருப்பத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள ஊக்குவிப்பது, ஒருவரின் வாழ்க்கை இறுதி அத்தியாயம் பலரின் வாழ்வில் ஒளியை ஏற்படுத்த முடியும் என்ற மனிதநேய செய்தியை மீண்டும் வலியுறுத்துவது போன்ற முக்கிய நோக்கத்தை கொண்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *