மெஹ்சானா, ஆக. 15- குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம் அம்பலியாசன் பகுதியில் உள்ள ராமன் கோயிலுக்குள் தனது தோழிகளுடன் செல்ல முயன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை தடுத்து நிறுத்தி அவரை அடித்து விரட்டிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங் களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில்களுக்குள் நுழைவது, திருமண விழாக்களில் குதிரை ஊர்வலம் செல்வது மற்றும் மீசை வைத்துக்கொள்வது போன்ற சாதாரண உரிமைகளுக்காகக் கூட தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல் தொடர்ந்து நீடித்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைக்குக் கற்பிப் போம்” போன்ற அரசு முழக்கங்கள் விளம்பரங்களுக்கே பயன்படுகின்றன என்றும், களத்தில் தாழ்த்தப்பட்ட பெண்களின் கண்ணியத் திற்குப் பாதுகாப்பு இல்லை என்றும் குமுறு கின்றனர்.
அம்பலியாசன் என்னும் ஊரில் தனது தோழிகளுடன் 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அங்குள்ள கோயில் ஒன்றுக்குச் சென்றார் அப்போது அவருடன் வந்த மற்றவர்களை உள்ளே அனுப்பி விட்டு தாழ்த்தப்பட்ட சமூக மாணவியை மட்டும் அனுமதிக்காமல் அவரை அடித்து விரட்டி உள் ளனர்.
இது தொடர்பாக குஜராத் சட்டமன்ற உறுப் பினரும், குஜ்ராத் மாநில சமூகநீதி அமைப்பின் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி கூறும் போது “இந்த கொடூர செயலில் ஈடுபட்ட கோயில் நிர்வாகம் மற்றும் இந்துத்துவ அமைப்பின் குண்டர்கள் மீது எஸ்சி எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இதில் குஜராத் அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கப் பிரதமர் அலு வலகம் உத்தரவிட வேண் டும்.
கோயில்கள் அனைத் துக் குடிமக்களுக்கும் பொதுவானவை என்ப தால், சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் எதிரான இத்தகைய நிகழ்வுகளில் மெத்தனப் போக்கைக் காட்டக் கூடாது” என வலியுறுத்தி யுள்ளார்
