தேசப்பற்றைப் பற்றி பார்ப்பனர்கள் பேசலாமா? – ஒரு வரலாற்று விமர்சனம்!

சிறப்பு புத்தக சலுகைகள்

சுமார் 25 நாட்களாக டில்லி உள்ளிட்ட நாடுமுழுவதும் நடந்த மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை ஒட்டி, பார்ப்பன தொழில் முனைவோர்கள் என்ற பெயரில் திரியும் சிறீதர் வேம்பு உள்ளிட்ட பலர், அம்மாணவர்களை தேசவிரோதிகள், வெளிநாட்டு தேசவிரோத சக்திகளிடம் பணம் பெற்றுக்கொண்டு நாட்டைக் காட்டிக்கொடுக்கும் துரோகிகள் என பலவாறு சமூக வலைதளங்களில் எழுதியும், பாஜக ஆதரவு ஊடகங்களில் அமர்ந்துகொண்டு எதிராளியை பேசவிடாமல் காட்டுக்கூச்சல் போட்டு வருகின்றனர். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆராய்ந்தால், இவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஒரு மாறுபட்ட வரலாறு நமக்குக் கிடைக்கிறது.

விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியத் தீபகற்பத்தில் சில பகுதிகளை குத்தகைக்கு எடுத்தபோதே துவங்கிவிட்டது. 1755-ஆம் ஆண்டு நெற்கட்டும் செவல் பூலித்தேவன், அழகுமுத்துக்கோன், கருப்பண்ணன், வேளப்பன் போன்றவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு மடிந்தனர். அப்போது ஆங்கிலேயர்களுக்கு பூலித்தேவன், அழகுமுத்துக்கோன் ஆகியோரின் பலவீனங்களை அவருடன் இருந்து சொல்லிக்கொடுத்து, ஆங்கிலேயர் வெற்றி பெறக் காரணமாக இருந்தவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

வரலாற்று சூழ்ச்சிகள்

ஜாதி வெறியரான வாஞ்சிநாதனை சுதந்திரப் போராளியாக மாற்றியது பார்ப்பன மொழிபெயர்ப்பாளர்களின் சூழ்ச்சி ஆகும். அன்றைய மாணவர் அமைப்பான ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் அண்ட் சோசலிஸ்ட் அசோசியேசன் உறுப்பினர்களான பகத் சிங், சுக்தேவ், சந்திரசேகர் ஆசாத் போன்றவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்களாக இருந்தனர். ஆங்கிலேயர்கள் இவர்களைப் பிடிக்க அன்றே ரூபாய் 5,000 வெகுமதி அறிவித்திருந்தனர்.

துரோகங்களின் வரலாறு

இந்த மாணவர் அமைப்பின் உறுப்பினர்களை குறிப்பாக சந்திரசேகர் ஆசாத்தின் கூடவே இருந்தே காட்டிக்கொடுத்தவர் வீரபத்திரத் தீவாரி என்ற பார்ப்பனர். புரட்சிப்படைத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை ஆல்ஃப்ரெட் பூங்காவில் புரட்சிக்கான ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தபோது, ஆங்கிலேயர் காவல்படையினர் சூழ்ந்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுக் கொடுத்தவர் அவரது நண்பராக இருந்த வீரபத்ர திவாரிதான். இந்தப் பச்சைத் துரோகத்திற்கு சாட்சியாக ஆசாத்தின் தோழர்களான வைசம்பாயன் மற்றும் சுகதேவ் ராஜ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் இல்லாவிட்டால் திவாரி என்ற பார்ப்பனரின் துரோகம் வரலாற்றில் மறைந்துபோயிருக்கும்.

“என் உயிர் இருக்கும் வரை பிரிட்டிஷ் காவல் துறையினரிடம் பிடிபட மாட்டேன்” என்ற தன் சபதத்தை இறுதி மூச்சு வரை காப்பாற்றிய ஆசாத், காவல்துறையுடனான துப்பாக்கிச் சூட்டின்போது வீரமரணமடைந்தார்.

நீதித்துறையில் நடந்த துரோகங்கள்

அதேபோல் பகத் சிங்கிற்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி வாதிட்ட வழக்குரைஞர்கள் கோபால் லால் மற்றும் பக்ஷி தீனா நாத் போன்ற பார்ப்பனர்கள் குறித்த வரலாறு இன்றும் ஏட்டில் உள்ளது. அதே வேளையில் பகத் சிங்கை கடைசிவரை எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்று லண்டன் வரை சென்று வாதிட்டவர்கள் ஆசிப் அலி, துனிசந்த் போன்றவர்கள்.

இப்படி வரலாறு எங்கும் பார்ப்பனர்கள் தேசத் துரோகிகளாகவே பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆகவே கல்வி அமைப்பின் சீரழிவைக் கண்டு வெகுண்டெழுந்த மாணவர்கள் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டும் முன்பு, தங்களின் முன்னோர்களான வீரபத்திர திவாரி, கோபால் லால், தீனா நாத் போன்ற பார்ப்பனர்களின் துரோகத்தைப் படித்துவிட்டு வரலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *