51 வயதிலும் எம்பிபிஎஸில் இடம்

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக.14- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நேற்று (13.8.2026) சென்னையில் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கலந்துகொண்ட ஒருவர் வியப்பை ஏற்படுத்தினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது நிறைவு செய்திருக்கும் சுரேஷ்குமார் என்பவர் எம்.பி.பி.எஸ். சீட்டை தட்டிப் பறித்து இளைஞர் பட்டாளத்துடன் படிப்பில் போட்டி போட தயாராகியிருக்கிறார். “சாதிக்க வயது ஒரு தடையில்லை” என்பதற்கு சுரேஷ்குமார் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்.

பள்ளிப்படிப்பை முடித்து மருத்துவ படிப்பை படிக்க ஆசைப்பட்ட சுரேஷ்குமாருக்கு அப்போது அது சாத்தியப்படவில்லை. இந்த நிலையில் 2022-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஆசை மீண்டும் பொறித்தட்ட நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதினார். ஆனால் அதில் அவரால் சாதிக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் தாயும், மகளும் சேர்ந்து மருத்துவ இடங்களை தேர்வு செய்த செய்தி அவருக்கு மேலும் உந்துதலை கொடுத்தது.

அதன் அடிப்படையில் 2026-ஆம் ஆண்டு நீட் தேர்வை எழுதி 192 மதிப்பெண் எடுத்திருந்த சுரேஷ்குமார், 2019-இல் நடந்த விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயத்தை சுட்டிக்காட்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவில், நேற்று (13.8.2026) நடந்த கலந்தாய்வில் பங்கேற்று நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை தேர்வு செய்திருக்கிறார்.

இதுகுறித்து சுரேஷ்குமார் கூறுகையில், ‘குருதிப்பரிசோதனை மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தேன். இப்போது என்னுடைய வேலையை உதறிவிட்டு, படிப்பை தொடர போகிறேன். சொந்த ஊரில் உள்ள கல்லூரியிலேயே படிக்க போகிறேன். நிச்சயம் மருத்துவப் படிப்பை நிறைவு செய்து மருத்துவராக வலம் வருவேன்’ என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *