கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.8.2026

சிறப்பு புத்தக சலுகைகள்

டெக்கான் கிரானிக்கல், சென்னை :

* நாடாளுமன்ற கூட்டத்தொடர் அமளியில் நிறைவு: நீட், மாணவர்கள் போராட்டம் மற்றும் கோயில் நன்கொடைகளில் முறைகேடு உள்ளிட்ட பிரச்சினைகளால் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் முழுவதும் அமளியும் ஒத்திவைப்பு களும் நீடித்தன. “விவாதம் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* ராகுல் காந்தி – பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மீது கடும் விமர்சனம்: ராகுல் காந்தி பா.ஜ.க.–ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை “கோமாளிகளின் கூட்டம்” என விமர்சனம். மோடியின் வெளிநாட்டு கொள்கையை ராகுல் கேலி செய்தது பொது விவாதத்தின் தரத்தை மேலும் தாழ்த்தியுள்ளதாக பா.ஜ.க. குற்றச்சாட்டு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:  

* ராஜஸ்தானில் ஓ.பி.சி. அரசியல் பிரதிநிதித்துவ ஆணையம் அறிக்கை: ராஜஸ்தானில் ஓ.பி.சி. மக்கள் தொகை சுமார் 43% (3.59 கோடி) என ஆணையம் மதிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019இல் மதிப்பிடப்பட்ட 52%அய் ஒப்பிடும்போது இது சுமார் 9 சதவீதப் புள்ளிகள் குறைவு; உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீட்டுக்கான உச்சநீதிமன்ற “மூன்று கட்ட சோதனை” அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தி இந்து:

* ஜே.என்.யு. துணைவேந்தர் பதவி விலக வேண்டும் – மாணவர், ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை: ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, ஜே.என்.யு. மாணவர் சங்கமும் ஆசிரியர் சங்கமும் துணைவேந்தர் சாந்திசிறீ துளிபுடி பண்டிட் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன. ஆசிரியர் நியமனங்களில் விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு.

* குரூப்-I தேர்வு: காலியிடங்களை அதிகரிக்கிறது, டி.என்.பி.எஸ்.சி.: குரூப்-I, குரூப்-II மற்றும் குரூப்-IIA தேர்வுகளுக்கான அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் குறைக்கப்பட்டதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் குரூப்-I தேர்வில் நிரப்பப்பட உள்ள காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தி டெலிகிராப்:

* அய்தராபாத் சட்டக் கல்லூரி – நல்சார் (NALSAR) விவகாரம்: பார் கவுன்சில் உத்தரவை திரும்பப் பெற்றார்: தலைமை நீதிபதி சூர்யகாந்தின் பட்டமளிப்பு விழா பங்கேற்புக்கு எதிர்ப்பு தெரி வித்ததாக கூறி,  நல்சார் சட்டப் பல்கலைக்கழக மாணவர்களின் சேர்க்கையைத் தடுக்க பார் கவுன்சில் பிறப்பித்த உத்தரவு கடும் எதிர்ப்பை தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே திரும்பப் பெறப்பட்டது. இதனால், இந்த ஆண்டு பட்டம் பெறும் அனைத்து மாணவர்களின் சட்டத் தொழில் வாய்ப்புகள் பாதிக்கப்படவிருந்த நிலையில், இந்திய பார் கவுன்சில் (BAR COUNCIL OF INDIA) தனது முடிவை மாற்றிக் கொண்டது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* தொகுதி மறுவரையறை அரசியலமைப்புக் கட்டாயம் – ஒன்றிய சட்ட அமைச்சர் உறுதி: 2026-க்குப் பிறகு தொகுதி மறுவரையறை (DELIMITATION) மேற்கொள்ளப்பட வேண்டும்; இது அரசியலமைப்பின் கட்டாயம் என ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். “அரசியலமைப் பில் எழுதப்பட்டுள்ளதால், அதை நடைமுறைப் படுத்தியே ஆக வேண்டும்” எனக் கூறி, எதிர்க் கட்சிகள் மீது விமர்சனம்.

* “மூவர்ணக் கொடியை விட காவிக்கொடி ஏன்?” – ஆர்.எஸ்.எஸ். மீது கருநாடகா உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கண்டனம். “முழுச் சீருடையில், கைகளில் பெருமையுடன் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தியபடி சுயம் சேவகர்கள் அணிவகுத்துச் செல்லும் எத்தனை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? ஒன்றுகூட இல்லை. ஆனால், இவர்கள்தான் அனைவருக்கும் ‘தேசபக்தர்’ என்ற சான்றிதழை வழங்கிக் கொண்டு சுற்றித் திரிகிறார்கள்,” என கார்கே கடும் விமர்சனம்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *