கடன் வலையில் சிக்கும் இளம் தலைமுறை இந்திய ரிசர்வ் வங்கி கவலை

சிறப்பு புத்தக சலுகைகள்

மும்பை, ஆக. 14– இளம் தலைமுறையினர் தங்களது 25ஆம் வயதிலேயே கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.

பைசாபசார் நிறுவ னம் தங்களின் 1 கோடிக் கும் மேல் உள்ள வாடிக் கையாளர்களை ஆய்வு செய்ததில் அவர்களில் தலைமுறைகள் மாறும் போது முதல் முறையாக கடன் பெறும் வயதும் கனிசமாக குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

1960-களில் பிறந்தவர்கள் கூட 47 வயதில் தங்க ளது முதல் கடன் பெறு கிறார்கள், ஆனால் 1990-களில் பிறந்தவர்கள் வயது 25 முதல் 28-க்குள் தங்களது முதல் கடனை பெற்றுவிடுகிறார்கள். இவர்களில் பலர் கிரெடிட் கார்டு, தனி நபர் கடன் அல்லது பொருள் கடன் மூலமாக இந்த கடன் சுழற்சியில் சிக்கிக் கொள்கிறார்கள்.

இவர்களை விட 2000-க்குப் பிறகு பிறந்த தலைமுறையினரிடம் இது மேலும் குறைந்து, 22 வயதிலேயே சிறிய அளவிலான கடன் பெறுகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

டிரான்ஸ்யூனியன் சிபில்-இன் ஜூலை மாத ஆய்வில், 2026 மார்ச் நிலவரப்படி புதிதாக கிரெடிட் கார்டு பயன்படுத்தத் தொடங்கியவர்களில் 50 சதவீதம் பேர் (Gen Z) இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். 2022 மார்ச் மாதத்தில் இந்த விகிதம் 43 சதவீதமாக இருந்தது. 2026 மார்ச் நிலவரப்படி இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் எண்ணிக்கை 5.2 கோடி யாக உயர்ந்துள்ளது.

2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 3.6 மடங்கு அதிகமாகும். அதேபோல் கிரெடிட் கார்டு நிலுவைக் கடன் ரூ.3.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும், 2024இல் முதல் முறையாக கிரெடிட் கார்டு பெற்ற (Gen Z) வாடிக்கையாளர்களில் 31 சதவீதம் பேரிடம் ஏற்கெனவே குறைந்தது 2 கடன் கணக்குகள் இருந் துள்ளன. இவர்களில் சுமார் 69 சதவீதம் பேர், முதல் கிரெடிட் கார்டைப் பெற்ற ஓராண்டுக்குள் மற்றொரு கடனையும் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் தலைமுறைகள் முக்கியமாக சுற்றுலா, நிகழ்ச்சி மற்றும் பிற நிகழச்சிகளுக்கு அதிகம் கடன் பெறுகிறார்கள். 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் பெற பட்ட தனிநபர் கடன் பாதிக்குமேல் சுற்றுலாவிற்காக பெறபட்டிருக்கிறது என்று முத்தூட் பினான்ஸ் நிறுவனம் கூறுகிறது. கடந்த 24 மாதத்தில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ரூ.2000 கோடி வரை செலவிடப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிட்டிருக்கிறது. அதில் அதிகமாக இளம் தலைமுறையினரே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

ரிசர்வ் வங்கியின் கவலை

‘இளம் தலைமுறை யினர் கடன் பெறுவதில் மட்டும் எங்களின் கவலை இல்லை, அவர்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள் , அந்த கடனை அவர்களால் திருப்பி செலுத்த முடியும் அளவிற்கு வருமானம் உள்ளதா என்பதே முக்கி யமான கவலையாக உள்ளது’ என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு கடன் அதிகம் வாங்கி தவணைகள் வருமானத்தை விட அதிகரித்தால், அதிக கடன் சுமைக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *