கிராமப்புறப் பள்ளிகளில் தூய்மைப் பணிக்கு வெறும் ரூ.87 கோடி

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 14- தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் கழிப்பறை மற்றும் தூய்மைப் பணிகளுக்கு ரூ.87 கோடி ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் மற்றும் கிராமப் புறங்களில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு, வகுப்பறை மற்றும் பள்ளி வளாக தூய்மைப் பணிகளுக்கும், நடப்பு 2026-2027ஆம் கல்வி ஆண்டில் அப்பள்ளிகளுக்கு தேவையான தூய்மைப் பணிக்கான பொருட்கள் வாங்குவதற்கும் ரூ.86.94 கோடிக்கு ஒப்புதல் வழங்குமாறு அரசுக்கு ஊரக வளர்ச்சி ஆணையர் கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்று, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் மேற்கண்ட பணிகளுக்காக மாநில நிதிக் குழு மானியத்தின் கீழ் ரூ.86.94 கோடிக்கு அரசு ஒப்புதல் வழங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *