திருச்சி, ஆக.13- மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில் ஒட்டுமொத்த வாகையரானது திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி! மாவட்டப் போட்டிக்குத் தகுதி பெற்று இமாலயச் சாதனை படைத்துள்ளது.
திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மண்டல அளவிலான டேக்வாண்டோ (Taekwondo) தற்காப்புக் கலைப் போட்டிகளில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 14 வயதிற்கு உட்பட்டோர் (U-14) பிரிவு மாணவர்கள் தங்களின் அபாரமான திறமையை வெளிப்படுத்தி, ஒட்டுமொத்த வாகையர் (Overall Championship) பட்டத்தைத் தட்டிச் சென்று பள்ளிக்கு மாபெரும் பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டிகளில் பங்கேற்ற இப்பள்ளியைச் சேர்ந்த 24 மாணவர்கள் தங்களின் மின்னல் வேகச் செயல்பாட்டின் மூலம் பல்வேறு எடைப்பிரிவுகளில் பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர். இதில் 19 மாணவர்கள் தங்கப் பதக்கமும், 3 மாணவர்கள் வெள்ளிப் பதக்கமும், 2 மாணவர்கள் வெண்கலப் பதக்கமும் வென்று இமாலயச் சாதனை புரிந்துள்ளனர்.
தங்கப் பதக்கம் வென்றவர்கள் (முதலிடம்):
ஏ.முபஷீர், எஸ்.சிறீ அஷ்வந்த், ஜி.அஜைப் முகமது,
ஏ.சந்தோஷ், கே.சிறீ சஞ்சய்ராம், என்.முகமது ரிஸ்வான்,
கே.தனிஷ்க், எஸ்.எம்.முகமது ஹாரிஷ் அப்பாஸ், கே.சிறீ ஹரிராம், ஜி. முகமது அர்பின், எஸ். அமல், மோஹிதா, சஞ்சனா, பூவிதழி, லேவியா, சாந்தினி, மாலினி, ரிதன்யா, பவித்ரா சிறீ.
வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள் (இரண்டாமிடம்):
- எஸ். அக்சன், 2. பி. ஜெயபிரகாஷ், 3. கே. விமல் பிரணவ்
வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் (மூன்றாமிடம்):
- பி. சுஜன், 2. டி. யுவரஞ்சித்
மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி:
மண்டல அளவிலான இப்போட்டிகளில் தங்களின் சிறந்த தற்காப்புக் கலைத் திறனை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்று முதலிடம் பிடித்த 19 மாணவர்களும், விரைவில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான டேக்வாண்டோ வாகையர் களப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பது பள்ளிக்கும் திருச்சி மாவட்டத்திற்கும் கூடுதல் பெருமை சேர்க்கும் செய்தியாகும்.
டேக்வாண்டோ களத்தில் மண்டல அளவில் ஆதிக்கம் செலுத்தி ஒட்டுமொத்த வாகையர் பட்டம் வென்ற மாணவ மாணவிகளையும், அவர்களைச் செதுக்கிச் சிறப்பான முறையில் பயிற்சி அளித்த டேக்வாண்டோ பயிற்சி ஆசிரியர் ஜெகன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சவுமியா, கோகுல் ஆகியோரைப் பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாகப் பாராட்டி, மாவட்டப் போட்டிகளிலும் வெற்றி வாகை சூடத் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
