சென்னையில் அறிவர் அம்பேத்கர் சிந்தனைக் களம் என்ற அமைப்பின் சார்பில் சிறப்பு கால்பந்து பயிற்சியாளருக்கான விருது கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புழல் த.ஆனந்தனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்த அழைப்பிதழில் புத்தர் தொடங்கி ஜோதிபாபூலே, அண்ணல் அம்பேத்கர் வரை பல தலைவர்களின் படம் இடம்பெற்றிருந்த நிலையில் தந்தை பெரியார் படம் இடம் பெறவில்லையே! தந்தை பெரியாரும், பாபா சாகேப் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இருப்பக்கங்களல்லவா?
“அனைவரின் படம் இருக்கும்போது பெரியார் படம் இல்லாமலிருப்பது சரியில்லை” என்று கூறி அந்த விருதினை ஏற்க மறுத்துள்ளார்.
