அதானி மீதான குற்றவியல் வழக்குகள் தள்ளுபடி! அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

நியூயார்க், ஆக. 12- இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் இணை அதிகாரி வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற சுமார் 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும், இதுதொடர்பான விவரங்களை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்துப் பொய்ப் பிரச்சாரம் செய்து நிதி திரட்டியதாகவும் கூறி கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பரில் அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

நீண்டகாலமாக நடைபெற்ற இந்த வழக்கில், அதானி மீதான நடவடிக்கைகளைக் கைவிடுவதாக அமெரிக்க நீதித்துறை கடந்த மே மாதம் அறிவித்தது. இந்த வழக்கின் பெரும்பகுதி இந்திய எல்லைக்குட்பட்டது என்றும், உள்நாட்டு வழக்குகளில் கவனம் செலுத்துவதற்காக இவ்வழக்கு் கைவிடப்படுவதாக அமெரிக்க நீதித்துறை அதிகாரி ட்ரென்ட் மெக்கோட்டர் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கராஃபிஸ், அதானி மீதான குற்றவியல் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *