அரபு நாடுகளிலேயே முதன்முறை மரண தண்டனையை அதிகாரபூர்வமாக ரத்து செய்தது லெபனான்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

பெய்ரூட், ஆக. 12–- லெபனான் நாட்டில் மரண தண்டனை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மரண தண்டனையை ஒழித்து அதற்குப் பதிலாகக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனையைச் சட்டமாக்கிய முதல் அரபு நாடு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை லெபனான் படைத்துள்ளது.

லெபனான் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான தீர்மானத்தின் மீது நேற்று (11.8.2026) வாக்கெடுப்பு நடைபெற்றது.  லெபனான் நாடாளுமன்றத்தில் உள்ள மொத்தம் 128 உறுப்பினர்களில், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தவிரப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இப்புதிய சட்டத்தின்படி, இனி மரண தண்டனைக்கு பதிலாகக் குற்றவாளிகளுக்குக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை வழங்கப்படும். லெபனானில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதலே மரண தண்டனை நிறைவேற்றுவது அதிகாரபூர்வமற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . எனினும், சட்டப்பூர்வமாக அது ரத்து செய்யப்படாமல் இருந்தது.

தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தின் மூலம், லெபனானில் மரண தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட்டுச் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக நாடுகளின் மத்தியில் லெபனானின் இந்த நடவடிக்கைக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *