செப்டம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் மொரீசியசில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 12- உலகத் தமிழர் பொருளாதார மாநாடு குறித்து வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன், தொழிலதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், உலகப் பொருளாதார நிறுவனத் தலைவர் வி.ஆர்.எஸ். சம்பத் ஆகியோர் கூட்டாக சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

உலகத் தமிழர்களின் பொருளாதார வலிமையை ஒருங்கிணைத்து, பன்னாட்டு முதலீடுகள், தொழில் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் புதிய பொருளாதாரக் கூட்டாண்மைகளை உருவாக்கும் நோக்கில் 13ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலகப் பொருளாதார உச்சி மாநாடு-2026 வருகிற செப்டம்பர் 11 முதல் 13 வரை மொரீசியசில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மாநாட்டு மய்யத்தில் நடைபெற உள்ளது.

உலகின் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரசுத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டை மொரீசியஸ் பிரதமர் டாக்டர் நவீன் சந்திர ராம்கூலாம் தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவில் மொரீசியஸ் அதிபர் தரம் பீர் கோகூல் கலந்து கொள்கிறார்.

ஒன்றிய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கஜேந்திர சிங் ஷெகாவத் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரன், புதுச்சேரி அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *