பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலை இலக்கியப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டியில் பள்ளி மாணவிகளின் சாதனை!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

திருச்சி, ஆக.12- 8ஆம் வகுப்பு மாணவி கே.லக்ஷனா, நவரச நாட்டியாலயா நடத்திய பரதநாட்டியத்தில் சிறப்பான பங்களிப்பிற்கான அங்கீகாரம் பெற்று பதக்கமும், சான்றிதழும் வென்றார். அதனைத்தொடர்ந்து தனி மற்றும் குழு நடனத்தில் அதிகபட்ச பங்கேற்புடன் கூடிய உலக சாதனை நிகழ்வில் பங்கேற்றார்.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

6ஆம் வகுப்பு மாணவி சி.சிஃபா 4ஆவது பன்னாட்டு சிலம்பம் வாகையர் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழும் வென்றார். அதனைத்தொடர்ந்து தேசிய சிலம்பம் வாகையர் போட்டியில் (Open National Championship – Silambam) பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்றார்.

இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப் படுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *