பொறியியல் 2ஆம் சுற்று கலந்தாய்வில் 40,299 மாணவர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டு ஆணை

2 Min Read

சென்னை, ஆக. 10- தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இரண்டாம் சுற்று கலந்தாய்வில் தங்களுக்கு கிடைத் துள்ள இடத்தை ஏற்றுக்கொண்ட 40,299 மாணவர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்டு மேல்நோக்கிய நகர்வுக்கு உறுதி செய்த 10,648 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளும் கொடுக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2026 கால அட்டவணையில் கொடுக்கப்பட்டிருந்த படி, இரண்டாம் சுற்றின் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்தல் நேற்றுடன் முடிவுற்ற நிலையில், தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்ட 40,299 மாணாக்கர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்டு மேல்நோக்கிய நகர்வுக்கு உறுதி செய்த 10,648 மாணாக்கர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளும் கொடுக்கப் பட்டுள்ளது. இதில் அரசுப் பள்ளியில் பயின்ற 6,914 மாணாக்கர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், 2,647 மாணாக்கர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளையும் சேர்த்து மொத்தமாக 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டாணை வெளியிடுவதற்கு முன்பாக 6.8.2026 அன்று ஒதுக்கீட்டாணைகளை 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 33 பேராசிரியர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு தரவரிசை மற்றும் விருப்ப பட்டியலின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதா என்று நேரடி சரிபார்ப்பு செய்யப்பட்டது.

தற்காலிக (Tentative) ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள், தங்கள் விருப்பத் தேர்வில் குறிப்பிட்டுள்ள TFC (Tamil Nadu Facilitation Centre) மய்யத்திற்கும், இறுதி (Provisional) ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணாக்கர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரியிலும் நேரடியாகச் சென்று 9.8.2026 முதல் 13.08.2026 வரை அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்விக் கட்டணத்தை செலுத்தி சேர்க்கை பெறவேண்டும்.

13-08-2026 அன்றுக்குள்,டிஎப்சி (TFC) மய்யத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்காத மாணாக்கர்கள் மற்றும் கல்லூரியில் சேராத மாணாக்கர்களுக்கான ஒதுக்கப்பட்ட இடங்கள் தானாகவே (Default) ரத்து செய்யப்படும். அவ்விடங்கள் அதே சுற்றில் (Round-2) மேல்நோக்கிய நகர்வுக்காக (Upward Movement) காத்திருக்கும் மாணாக்கர்களுக்கு ஒதுக்கப்படும்.

மாணாக்கர்களுக்கு இறுதியாக ஒதுக்கப்பட்ட இடங்கள் www.tneaonline.org இணையதளத்தில் வெளிப்படைத் தன்மையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. பி.இ/பி.டெக்/பி.ஆர்க்-துணைக்கலந்தாய்வானது, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணாக்கர்கள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் விண்ணப்பிக்காத மாணாக்கர்களுக்குக்காண விண்ணப்பங்கள் 17.8.2026 முதல் 31.8.2026 வரை பெறப்பட்டு, துணைக்கலந்தாய்வு 3.9.2026 முதல் 7.9.2026 வரை நடைபெறும்.

இது தொடர்பாக, மாணாக்கர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *