நாகமங்கலம், ஆக. 9- மருந்தியல் பெரியார் கல்லூரியின் மருந்தியல் முதலாமாண்டு பட்டயப்படிப்பு மாணவர்கள் நாகமங்கலம் ஹர்ஷ மித்ரா மருத்துவமனையை 08.08.2026 அன்று பார்வையிட்டனர்.
ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர் க. கோவிந்தராஜ் மற்றும் மருத்துவர் சசிபிரியய கோவிந்தராஜ் ஆகி யோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் புற்றுநோய் பரிசோதனை ஆய்வுக் கூடம், கதிரியக்க சிகிச்சை மற்றும் மருந்தியல் சிகிச்சை முறைகளை நேரடியாக பார்வையிட்டனர். மேலும் மருத்துவப் பயனாளிகளின் நேரடி அணுகுமுறை, மருந்தக செயல்பாடுகள் அனைத்தையும் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மருத்துவர் மரு. சசிப்ரியா கோவிந்தராஜ் புற்று நோய் மருத்துவம் குறித்த பல தகவல்களை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்ததோடு, புற்றுநோய் சிகிச்சையில் அளிக்கப்படும் கீமோதெரபி மருந்தியல் சிகிச்சை முறைகளையும் மாணவர்களுக்கு நன்கு விளக்கி, அவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.
பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் துணை இயக்குநர் முனை வர் விஜயலெட்சுமி, பேராசிரியர்கள் தினேஷ், தி.சேதுராஜா, திரிஷ்யா நாகராஜ் மற்றும் அன்சா சி. ஆகி யோர் மாணவர்களை வழிநடத்தினர்.
பாடத்திட்டம் கடந்து மருத்துவ மனையினை பார்வையிட்டது தங்களது மருந்தியல் ஆய்வுத் திறனை வளர்த்ததாக மாணவர்கள் தெரிவித்ததோடு இத்தகைய பெரும் வாய்ப்பை வழங்கிய கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர் க. கோவிந்தராஜ், மருத்துவர் சசிபிரியா கோவிந்தராஜ் மற்றும் மருத்துவ குழுவினருக்கு தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
