சென்னை, ஆக. 9- நியாயமான தொகுதி மறுசீரமைப்புதான் தமிழ் நாட்டிற்கு தேவை என்று திமுக துணை பொதுச் செயலரும், அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் 8.8.2026 அன்று கூறியதாவது:
தொகுதி மறுசீரமைப்பு தொடா் பாக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தவெக பொது செயலா் என்.ஆனந்த் கலந்துகொண்டு தீா்மானத்தை ஆதரித்து கையொப் பமிட்டார். பேரவையில் பாஜக தவிர மற்ற அனைத்துக் கட்சி களின் ஆதரவுடன் தீா்மானம் நிறை வேற்றப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக திமுகதான் முதல் கட்சியாக குரல் கொடுத்தது. இந்தியா முழுவதிலும் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களைச் சோ்ந்த 5 முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை அழைத்து சென்னையில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் முதலமைச்சர்கள் உள்பட சில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனா்.
தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கவில்லை; நியாயமான தொகுதி மறுசீரமைப்பு நடத்த வேண்டும் என்பதுதான் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. அந்தத் தீா்மானத்தை ஏற்றுக்கொண்டு அனைவரும் கையொப்பமிட்டனா்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக ஒரு மசோதா தோற்கடிக்கப்பட்டது என்றால் அது திமுக உள்பட சில கட்சிகள் எதிர்த்த தொகுதி மறுசீரமைப்பு மசோதாதான். இந்த அளவுக்கு மாநில உரிமைக்காக குரல் கொடுத்துக்கொண்டுள்ள இயக்கம் திமுக.
மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொண்டுவரப்படப் போகிறது எனப் பரவலாகப் பேசப்படுகிறதே தவிர, இன்னும் அதிகாரபூா்வமாக எந்த அறிவிப்பும் இல்லை. இந்தச் சூழலில் இப் போது தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி உள்ளனா் என்றால், இந்த அரசை பின்னால் இருந்து இயக்குபவா்கள் யார்?.
இவா்கள் நடத்திய கூட்டம் தொடா்பாக முறையாகக் கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலா் தனித்தனியாகக் கடிதம் எழுதியுள்ளார். இவா் தமிழ்நாடு அரசின் செயலரா இல்லை, தவெக கட்சியின் செயலரா?.
தற்போது காவிரி நதிநீா் பிரச்சினை, மேகதாது பிரச்சினை, விவசாயிகள் போராட்டம் என இருக்கும் சூழலில், இந்தப் பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்ப இந்தக் கூட்டம் நடந்துள்ளது. காவிரி பிரச்சினையில் கருநாடக காங்கிரஸ் அரசைக் காப்பாற்ற தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டத்தைக் கூட்டியுள்ளனா். தோ்தலுக்குப் பிறகு முதுகில் குத்தி ஓடியவா்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக எப்போதும் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாப்பதில் முதன்மையாக நிற்கும் என்றார் அவா்.
